ADVERTISEMENT

அமீரகத்தில் தொடர்ந்து சரியும் வெப்பநிலை..!! இன்று 2.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவு..!!

Published: 3 Jan 2025, 1:54 PM |
Updated: 3 Jan 2025, 1:57 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தில் குளிர்காலம் தொடங்கியுள்ள நிலையில், இன்றையதினம் நாட்டின் மிக உயரமான மலையில் இதுவரை இல்லாத அளவுக்கு குளிர் பதிவு செய்யப்பட்டுள்ளது, மேலும் அங்கு உறைபனி மற்றும் சிறுசிறு பனிக் கட்டிகள் ஆங்காங்கே சிதறிக்கிடக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோக்களும் வெளியிடப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

இது தொடர்பாக நாட்டின் தேசிய வானிலை ஆய்வு மையமான (NCM) வெளியிட்டுள்ள வானிலை அறிவிப்பில், ராஸ் அல் கைமாவில் உள்ள ஜெபல் ஜெய்ஸில் இன்று (வெள்ளிக்கிழமை) சரியாக காலை 6.45 மணியளவில் வெப்பநிலை 2.2 டிகிரி செல்சியஸ் வரை குறைந்ததாகத் தெரிவித்துள்ளது.

NCM வெளியிட்ட வீடியோ ஒன்றில், மலையில் உள்ள நீரோடையில் பனிக்கட்டிகள் மிதப்பதைக் காண முடிகிறது.
மற்றொரு வீடியோ கிளிப், பார்க்கிங் செய்யப்பட்ட கார் மீது பனித்துகள்கள் பரவிக்கிடப்பதையும், உறைபனி படிகங்கள் தரையில் இருப்பதையும் காட்டுகிறது.
இத்தகைய குளிர்ச்சியான வானிலையால், குடியிருப்பாளர்களும் மகிழ்ச்சியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

V

ஐக்கிய அரபு அமீரகத்தில் இதுபோன்ற உறைபனி தோன்றுவது இது முதல் முறை அல்ல. பொதுவாக, அல் அய்னில் உள்ள ரக்னா மற்றும் ராஸ் அல் கைமாவில் உள்ள ஜெபல் ஜெய்ஸ் போன்ற நாட்டின் சில குளிர் இடங்களில் குளிர்காலத்தின் போது, பனித் துகள்கள் அல்லது பனிப்பொழிவு கூட ஏற்படும்.

ADVERTISEMENT

 

இதுபோன்ற, உயரமான மலைகளில் பூஜ்ஜியத்திற்கு குறைவான வெப்பநிலை பதிவாகிய காலம் இருந்ததாகவும், அந்த சமயங்களில் பெரும்பாலான குடியிருப்பாளர்கள் பனியுடன் விளையாடுவதற்கும், பனிப்பொழிவை ரசிப்பதற்கும் சிகரத்திற்கு பயணிப்பதால், உடனடி ‘சுற்றுலாத் தலமாக’ மாறிவிடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும், துபாய், அபுதாபி, ஷார்ஜா, உம் அல் குவைன் மற்றும் ராஸ் அல் கைமாவின் பல பகுதிகளில் மழை பதிவானதால் வெள்ளிக்கிழமை குடியிருப்பாளர்கள் குளிர்ந்த வானிலையை அனுபவித்து வருகின்றனர்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel