ADVERTISEMENT

கட்டண பார்க்கிங் அமைப்பில் ஷார்ஜா அறிவித்திருக்கும் சமீபத்திய மாற்றங்கள் என்னென்ன..??

Published: 22 Jan 2025, 9:47 AM |
Updated: 22 Jan 2025, 9:47 AM |
Posted By: Menaka

ஷார்ஜா எமிரேட் கடந்த 2024 ஆம் ஆண்டின் கடைசி காலாண்டிலிருந்து அதன் பார்க்கிங் அமைப்பில் பல மாற்றங்களைச் செய்துள்ளது. அவற்றில் ஒன்று அடுத்த மாதம் முதல் நடைமுறையில் வரவுள்ளது.

ADVERTISEMENT

ஷார்ஜாவில் பார்க்கிங் இடங்கள் பொதுவாக நீலம் மற்றும் வெள்ளை (curb) அடையாளங்களுடன் குறிக்கப்படுகின்றன, அதனுடன் பயன்பாடு மற்றும் கட்டணங்கள் பற்றிய தெளிவான வழிமுறைகளை வழங்கும் அடையாளம் இடம்பெற்றிருக்கும். மேலும், பயனர்கள் ப்ரீபெய்ட் பார்க்கிங் சந்தாக்களையும் தேர்வு செய்யலாம், இது தனிநபர்கள் மற்றும் வணிகங்கள் அவர்கள் தேர்ந்தெடுத்த திட்டங்களின்படி கட்டண பார்க்கிங் இடங்களைப் பயன்படுத்த அனுமதிக்கிறது.

சந்தாதாரர்கள் ஷார்ஜாவின் அனைத்து பகுதிகளுக்கும் அல்லது இரண்டு குறிப்பிட்ட பகுதிகளுக்கும் தனிப்பட்ட சந்தாவை தேர்வு செய்யலாம், அதே நேரத்தில் வணிகங்கள் நகரம் முழுவதும் பார்க்கிங் திட்டத்தை தேர்வு செய்யலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தா வகையின் அடிப்படையில் கட்டணங்கள் மாறுபடும். சமீபத்தில் பார்க்கிங்கிற்காக நீட்டிக்கப்பட்ட நேரங்கள் முதல் புதிய பார்க்கிங் மண்டலங்கள் வரை, ஷார்ஜாவின் பார்க்கிங் அமைப்பில் செயப்பட்டுள்ள 3 முக்கிய மாற்றங்கள் குறித்து பின்வருமாறு பார்க்கலாம்.

ADVERTISEMENT

ஏழு நாள் பார்க்கிங் மண்டலங்கள் (7 day parking zones)

ஷார்ஜா எமிரேட்டில் கடந்த அக்டோபர் 2024 இல், ஏழு நாள் மண்டலங்களுக்கான புதிய நீட்டிக்கப்பட்ட நேரம் அறிவிக்கப்பட்டது. இந்த மாற்றம் நவம்பர் 1, 2024 முதல் அமல்படுத்தப்பட்டது. புதிய நேரத்தின் படி, வாகன ஓட்டிகள் காலை 8 மணி முதல் நள்ளிரவு வரை பார்க்கிங் செய்ய கட்டணம் செலுத்த வேண்டும். இது முன்பு 8 மணி முதல் இரவு 10 மணி வரை என இருந்தது குறிப்பிடத்ததக்கது.

நகரம் முழுவதிலும் உள்ள ஏழு நாள் பார்க்கிங் மண்டலங்கள் நீல நிற பார்க்கிங் அடையாளங்களுடன் பெயரிடப்பட்டுள்ளன. இந்த 16 மணி நேர கட்டண பார்க்கிங் மண்டலங்கள் வாரம் முழுவதும் மற்றும் பொது விடுமுறை நாட்களில் செயல்படும். வாகன ஓட்டிகள் SMS மூலம் பார்க்கிங் கட்டணத்தைச் செலுத்தலாம்.

ADVERTISEMENT

அல் தைத் நகரில் பார்க்கிங் கட்டணம்

ஷார்ஜாவின் அல் தைத் நகரில் வாகனத்தை பார்க்கிங் செய்ய சமீபத்தில் கட்டணம் அறிவிக்கப்பட்டு தற்பொழுது வசூலிக்கப்படுகிறது. இது இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வந்தது மற்றும் சனிக்கிழமை முதல் வியாழன் வரை காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை கட்டணம் பொருந்தும். மற்ற சாதாரண பார்க்கிங் மண்டலங்களைப் போலவே, வாகன ஓட்டிகள் வெள்ளிக்கிழமைகளில் இலவசமாக பார்க்கிங் செய்யலாம்.

கல்பா நகரில் பார்க்கிங் கட்டணம்

வருகின்ற பிப்ரவரி 1ஆம் தேதி முதல் கல்பா நகரில் பார்க்கிங் கட்டணம் விதிக்கப்படும் என்று நகரின் முனிசிபாலிட்டி இந்த மாத தொடக்கத்தில் அறிவித்தது. அந்த அறிவிப்பின் படி, சனி முதல் வியாழன் வரை காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை கட்டணம் விதிக்கப்படும். வாரம் முழுவதும் கட்டணம் விதிக்கப்படும் குறிப்பிட்ட மண்டலங்கள் தவிர, வெள்ளிக்கிழமைகளில் பார்க்கிங் இலவசம் என கூறப்பட்டுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel