ADVERTISEMENT

UAE: ஜனவரி 25 முதல் தொடங்கும் ‘கஸ்ர் அல் ஹொஸ்ன்’ ஃபெஸ்டிவல்..!! முழு விபரங்கள் இங்கே.!!

Published: 25 Jan 2025, 8:50 PM |
Updated: 25 Jan 2025, 8:57 PM |
Posted By: Menaka

அமீரகத்தில் வசிக்கும் நீங்கள் வார இறுதியில் குடும்பத்துடன் வெளியே செல்ல திட்டமிடுகிறீர்களா? அப்படியானால், கஸ்ர் அல் ஹோஸ்னில் (Qasr Al Hosn) நடைபெறும் அல் ஹொஸ்ன் ஃபெஸ்டிவல் சிறந்த தேர்வாக இருக்கும். அபுதாபி கலாச்சாரத்தின் வருடாந்திர கொண்டாட்டமான இந்த ஃபெஸ்டிவல் எமிரேட்டின் செழுமையான பாரம்பரியத்தை அனுபவிக்கும் வாய்ப்பை வழங்குகிறது. இந்த ஃபெஸ்டிவல் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முழு விபரங்களும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அபுதாபியின் கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத் துறையால் (DCT அபுதாபி) ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அல் ஹோஸ்ன் ஃபெஸ்டிவல் இன்று (ஜனவரி 25) கோலாகலமாகத்  தொடங்கியுள்ளது, இது குடும்பங்களுக்கும் தனிநபர்களுக்கும் ஒரு அற்புதமான பொழுதுபோக்கு செயல்பாட்டை வழங்குகிறது.

பிப்ரவரி 9, 2025 வரை நடைபெறும் இந்த நிகழ்வில், எமிரேட்டின் புகழ்பெற்ற விருந்தோம்பல் மற்றும் பாரம்பரிய எமிராட்டி உணவு வகைகளில் இருந்து பாரம்பரிய உடைகள், பழக்கவழக்கங்கள், நிகழ்ச்சிகள் மற்றும் கைவினைப்பொருட்கள் வரை எமிராட்டி சமூகத்தின் பாரம்பரியங்களில் பார்வையாளர்கள் கண்டுகளிக்கலாம்.

ADVERTISEMENT

வரலாற்றுச் சிறப்பு மிக்க கட்டிடம்

கஸ்ர் அல் ஹோஸ்ன், அபுதாபியின் பழமையான மற்றும் மிக முக்கியமான கட்டிடமாகும். 1790 களில் கட்டப்பட்ட இந்த கண்காணிப்புகோபுரம் (watchtower) நகரின் முதல் நிரந்தர அமைப்பாகும். கடலோர வர்த்தக வழிகளைக் கண்காணிக்கும், இந்த கமாண்டிங் அமைப்பு இப்போது நகரத்தின் பாரம்பரியத்தின் அடையாளமாக உள்ளது.

ஃபெஸ்டிவலில் என்ன எதிர்பார்க்கலாம்?

பெரியவர்களுக்கான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் முதல் குழந்தைகளுக்கான ஒர்க் ஷாப்கள் மற்றும் கலைக் கண்காட்சிகள் வரை ஃபெஸ்டிவலில் அனைத்து வயதினருக்கும் ஏதாவது செயல்பாடுகள் இருக்கும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

முக்கிய நிகழ்வுகள்

  • சூக்
  • குழந்தைகள் ஒர்க் ஷாப்
  • உணவு மற்றும் பானங்கள்
  • பாரம்பரிய நிகழ்ச்சிகள்
  • இசை நிகழ்ச்சிகள்
  • கலை காட்சிகள்
  • பொழுதுபோக்கு செயல்பாடுகள் மற்றும் பல

DCT அபுதாபியின் படி, இந்த ஆண்டு விரிவாக்கப்பட்ட இந்த திட்டம் புதிய அனுபவங்களை அறிமுகப்படுத்துகிறது மற்றும் கைவினைப்பொருட்கள், வடிவமைப்பு, உணவு வகைகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் ஆகியவற்றில் பல்வேறு வகையான பங்களிப்பாளர்களைக் கொண்டுள்ளது.

மேலும், இந்த ஃபெஸ்டிவல் ‘ஹெரிட்டேஜ் சோன்’, ‘கிராஃப்ட்ஸ் சோன்’ மற்றும் ‘கம்யூனிட்டி சோன்’ என மூன்று முக்கிய மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

  • ஹெரிட்டேஜ் சோன்- கடந்த காலத்திற்குள் நுழைந்து வரலாற்றுச் சிறப்புமிக்க அபுதாபியின் பழக்கவழக்கங்களையும் அன்றாட வாழ்க்கையையும் ஆராயலாம். அங்குள்ள கைவினைஞர்கள், பழமையான திறமைகளை வெளிப்படுத்தி, பழங்கால கலை வடிவங்களை உயிர்ப்பிக்கும் நிகழ்ச்சிகளை கண்டு மகிழலாம்.
  • கிராஃப்ட்ஸ் சோன் – அங்கு பாரம்பரிய கைவினைஞர்கள் மற்றும் நவீன வடிவமைப்பாளர்களின் கலைப் படைப்புகளைக் கண்டு ரசிக்கலாம்.  மேலும், உங்கள் படைப்பாற்றலைத் தூண்டும் ஒர்க் ஷாப்களில் பங்கேற்கலாம்.
  • கம்யூனிட்டி சோன் – இந்த மண்டலம் இன்று அபுதாபியின் செழிப்பான கலை சமூகம் மற்றும் படைப்பாற்றல் உணர்வைக் கொண்டாடுகிறது. இந்த மண்டலம் இசை, கலை, திரைப்படம், வடிவமைப்பு மற்றும் உணவு ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

நேரங்கள்:

  • திறக்கும் நேரம்: மாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை
  • கடைசி நுழைவு: இரவு 10.30 மணி வரை அனுமதிக்கப்படுவார்கள்

டிக்கெட் விலை

  • பெரியவர்கள் (13 முதல் 59 ஆண்டுகள்): 35 திர்ஹம்ஸ்
  • குழந்தைகள் (5 முதல் 12 ஆண்டுகள் வரை): 15 திர்ஹம்ஸ்
  • ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகள், 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், மற்றும் மாற்றுத்திறனாளிகள் இலவசமாக நுழையலாம்.

டிக்கெட்டுகளை அபுதாபி கலாச்சார வலைத்தளமான-https://abudhabulture.ae/en/cultural-programmes/heritage-festivals/al-hosn-festival வழியாக ஆன்லைனில் வாங்கலாம். இணையதளத்தில் உள்நுழைந்ததும் ‘Book Your Tickets Now’ என்ற பொத்தானைக் கிளிக் செய்து டிக்கெட்டுகளை வாங்கலாம். மேலும், ஆன்சைட் டிக்கெட் சாவடிகளிலும் டிக்கெட்டுகள் கிடைக்கின்றன.

இடம்

காஸ்ர் அல் ஹோஸ்ன், ஷேக் ரஷீத் பின் சயீத் அல் மக்தூம் ஸ்ட்ரீட், அல் ஹோஸ்ன், அபுதாபி.

பார்க்கிங் விபரம்

கோல்டு பார்க்கிங் (இலவசம்): செல்லுபடியாகும் ஃபெஸ்டிவல் டிக்கெட்டுடன் இந்த கோல்டு பார்க்கிங் கிடைக்கிறது. காம்ப்ளிமென்ட்ரி சேவைகள் உங்களை ஃபெஸ்டிவல் வாயிலுக்கு அழைத்துச் செல்லும்.

நீல மற்றும் பச்சை பார்க்கிங் (பணம்): முதல் இரண்டு மணிநேரங்களுக்கு 80 திர்ஹம்ஸ், ஒவ்வொரு கூடுதல் மணிநேரத்திற்கும் 10 திர்ஹம்ஸ்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel