ADVERTISEMENT

அபுதாபியில் போக்குவரத்து ஓட்டத்தை மேம்படுத்த 2 புதிய பாலங்கள் திறப்பு!!

Published: 5 Jan 2025, 2:36 PM |
Updated: 5 Jan 2025, 2:36 PM |
Posted By: Menaka

போக்குவரத்தை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை அமீரகம் மேற்கொண்டு வரும் நிலையில் அவற்றில் ஒன்றாக அபுதாபியில் இரண்டு புதிய பாலங்கள் சமீபத்தில் திறக்கப்பட்டது. இந்த பாலங்கள் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, அபுதாபியில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் பயண நேரத்தில் குறிப்பிடத்தக்க குறைப்பை எதிர்பார்க்கலாம் என்று எமிரேட்டின் முனிசிபாலிட்டி மற்றும் போக்குவரத்து துறை (DMT) தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

இந்த பாலங்கள் அல் கலீஜ் அல் அரபி ஸ்ட்ரீட்டை முசாஃபாவை நோக்கி செல்லும் ஷக்பூத் பின் சுல்தான் ஸ்ட்ரீட்டை இணைக்கும் முக்கிய பாதையில் போக்குவரத்து ஓட்டத்தை மேம்படுத்தும் என்றும், சராசரி காலை நேர போக்குவரத்து நெரிசலால் ஏற்படும் தாமதத்தை வெறும் 20 வினாடிகளுக்கு குறைக்கும் என்றும் கூறியுள்ளது.

DMT வெளியிட்ட தகவல்களின் படி, இந்தப் புதிய பாலங்கள், குறிப்பாக அபுதாபி, சையத் சர்வதேச விமான நிலையம், முசாஃபா மற்றும் ஹுதைரியாத் ஐலேண்ட் ஆகிய இடங்களுக்குச் செல்லும் பயணிகளுக்குப் பலனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

சுமார் 315 மில்லியன் திர்ஹம்ஸ் செலவில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த திட்டமானது, அல் கலீஜ் அல் அரபி ஸ்ட்ரீட்டில் மூன்று வழி மேம்பாலம் மற்றும் ஷாக்பூத் பின் சுல்தான் ஸ்ட்ரீட்டை அதே சாலையில் இணைக்கும் இருவழிப் பாலம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. மொத்தம் 742 மீட்டர் நீளம், 10,242 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ள புதிய பாலங்கள் ஐந்து பாதைகள், 61 தெரு விளக்குகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

கூடுதலாக, 46,000 சதுர மீட்டருக்கும் அதிகமாக தெருவின் தோற்றத்தை மேம்படுத்தியிருப்பதாகவும், அவற்றின் கட்டுமானத்தில் 15,354 கன மீட்டர் கான்கிரீட் பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

புதிய பாதசாரி பாதைகள் மற்றும் சைக்கிள் பாதைகள், மேம்படுத்தப்பட்ட சேவை சாலைகள் போன்றவற்றை உள்ளடக்கிய இந்த மேம்பாட்டில் ஒரு மணி நேரத்திற்கு 7,500 வாகனங்கள் வரை இடமளிக்கும் மற்றும் வளர்ந்து வரும் போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்யும் என்று கூறப்பட்டுள்ளது.

இது குறித்து DMTயின் நகராட்சிகள் மற்றும் போக்குவரத்துத் துறையின் தலைவர் முகமது அலி அல் ஷோராஃபா அவர்கள் பேசுகையில்,  நெரிசலைக் குறைத்தல், பயண நேரத்தைக் குறைத்தல், போக்குவரத்து பாதுகாப்பை மேம்படுத்துதல் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல் போன்ற பல்வேறு நவீன போக்குவரத்து முறைகள் மூலம் தடையற்ற, மேம்படுத்தப்பட்ட நகரத்தை உருவாக்குவதே DMT-யின் நோக்கம் என்று கூறியுள்ளார்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel