ADVERTISEMENT

குவைத்: குளிருக்காக அறைக்குள் தீ மூட்டிவிட்டு உறங்கியதால் உயிரிழந்த சோகம்!! 2 தமிழர்கள் உட்பட 3 பேர் பலி..!!

Published: 22 Jan 2025, 2:34 PM |
Updated: 22 Jan 2025, 2:34 PM |
Posted By: Menaka

குவைத் நாட்டில் ஓட்டுனர்களாக பணிபுரிந்து வந்த 2 தமிழர்கள் உட்பட 3 பேர் இரவில் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ள சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. குவைத்தில் கடலூரை சேர்ந்த முகமது யாசின், முகமது ஜூனைத் ஆகிய 2 தமிழர்கள், கொல்கத்தாவைச் சேர்ந்த ஒருவர் உட்பட நான்கு பேர் ஓட்டுனர்களாக பணிபுரிந்து வந்துள்ளனர். இவர்கள் அனைவரும் உரிமையாளர் வழங்கிய அறையிலேயே வசித்து வந்த நிலையில், இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ADVERTISEMENT

குவைத்தில் தற்போது குளிர்காலம் என்பதால், தீமூட்டி குளிர்காய்வது என்பது வழக்கமான ஒன்றாகும். அந்தவகையில், 4 பேர் ஒரே அறையில் நெருப்பு மூட்டி விட்டு, அப்படியே உறங்கச் சென்றுள்ளனர். அப்போது, தீயில் இருந்து வெளியேறிய கார்பன் – டை – ஆக்சைடு வாயு அவர்கள் படுத்திருந்த அறையை சூழ்ந்து கொண்டது. அறைக்குள் ஆக்ஸிஜன் அளவு குறையத் தொடங்கியதால், மூன்று பேருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.

அடுத்த சில நொடிகளுக்கு மூச்சு விட முடியாமல் சிரமப்பட்டவர்கள், உறக்கத்திலேயே உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இவர்களில் ஒருவர் மட்டும் தாமதமாக அந்த அறைக்கு உறங்கச் சென்றதால், சரியான நேரத்தில் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர், தற்போது அவர் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த சம்பவம் குறித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களது உடலை இந்தியாவிற்கு கொண்டு வர போதிய வசதி இல்லை எனக் கூறி, மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும் என அவர்களது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். குளிருக்காகவென எரிக்கப்பட்ட தீ மூன்று பேரின் உயிரை வாங்கிய இந்த நிகழ்வானது அதிர்ச்சியையும் சோகத்தையும் அனைவரின் மத்தியிலும் ஏற்படுத்தியுள்ளது.

இது போன்ற வளைகுடா நாடுகளின் முக்கிய செய்திகள் அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

ADVERTISEMENT