ஷார்ஜாவின் அல் குதைரா பகுதியில் பயங்கரமான கார் விபத்தில் சிக்கி கடுமையான காயங்களுக்கு ஆளான 25 வயதான ஆசிய வெளிநாட்டவர் ஒருவரை உள்துறை அமைச்சகத்தின் ஏர் விங் துறையைச் சேர்ந்த ஏர் ஆம்புலன்ஸ் குழுவினர் பத்திரமாக மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
ஏர் விங் செயல்பாட்டு அறை, தேசிய ஆம்புலன்ஸிடமிருந்து அவசர கோரிக்கையைப் பெற்றவுடன், அவரது அவசர மருத்துவ சிகிச்சைக்காக அல் தைத் மருத்துவமனைக்கு ஹெலிகாப்டரை ஒருங்கினைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் படி, ஏர் ஆம்புலன்ஸ் குழுவினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர். இரண்டு வாகனங்கள் ஒன்றோடொன்று மோதியதில் படுகாயம் அடைந்த ஆசிய நபரின் உயிரை ஊழியர்கள் காப்பாற்றியுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக உள்துறை அமைச்சகம் பதிவேற்றிய வீடியோவில், அதிகாரிகள் ஒதுக்குப்புறமான பகுதியில் உள்ள சாலையில் ஒரு குறிப்பிட்ட பகுதியைத் தடுப்பதையும், அங்கு ஒரு வாகனம் கவிழ்ந்தும் மற்றொறு வாகனம் சாலையில் விபத்துக்குள்ளாகி இருப்பதையும் காட்டுகிறது.
சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர் காயமடைந்த நபரை மீட்டு ஹெலிகாப்டரில் ஒருமுறை முதலுதவி சிகிச்சை அளிப்பதையும், பின்னர் மேல் சிகிச்சைக்காக அந்த நபரை பத்திரமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் காட்சிகளையும் வீடியோவில் காணலாம்.
The Air Ambulance crews from the Air Wing Department of the General Directorate of Security Support at the Ministry of Interior saved the life of a 25-year-old Asian resident who sustained severe injuries in a collision between two vehicles in the Al-Khudaira area of Sharjah.… pic.twitter.com/zAluFmlTgr
— وزارة الداخلية (@moiuae) January 25, 2025
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel