ADVERTISEMENT

கெத்து காட்டும் UAE மற்றும் இந்தியா..!! 2024ல் 50 பில்லியன் டாலரை தாண்டிய வெளிநாட்டு வர்த்தகம்.!!

Published: 18 Jan 2025, 3:08 PM |
Updated: 18 Jan 2025, 3:08 PM |
Posted By: Menaka

2024 ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இந்தியாவிற்கும் இடையேயான எண்ணெய் அல்லாத வெளிநாட்டு வர்த்தகம் 22.6 சதவீதம் அதிகரித்து 53.8 பில்லியன் டாலரை (197.44 பில்லியன் திர்ஹம்ஸ்) எட்டியுள்ளதாகவும், இது ஐக்கிய அரபு அமீரகத்தின் மூன்றாவது பெரிய உலகளாவிய வர்த்தக பங்காளியாக இந்தியாவை மாற்றியுள்ளதாகவும் அமீரகத்தின் பொருளாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

இந்த புள்ளிவிவரங்கள் அமீரகத்தின் பொருளாதார அமைச்சர் அப்துல்லா பின் தூக் அல் மரி மற்றும் இந்தியாவின் கேரள மாநிலத்தின் தொழில் மற்றும் சட்ட அமைச்சரான பி.ராஜீவ் ஆகியோருக்கு இடையே துபாயில் நடந்த சந்திப்பின் போது வெளியிடப்பட்டுள்ளன. இது குறித்து அல் மரி அவர்கள் பேசுகையில், கேரளா பல நம்பிக்கைக்குரிய பொருளாதார மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை வழங்குகிறது என்று கூறியுள்ளார்.

மேலும், இந்த சந்திப்பின்போது, சுற்றுலா, மேம்பட்ட உற்பத்தி, வட்டப் பொருளாதாரம், விவசாயம் மற்றும் புதுமை உள்ளிட்ட பல துறைகளில் UAE மற்றும் கேரளா இடையே பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும், ​​இருதரப்பு வர்த்தகத்தை மேம்படுத்த விரிவான பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தம் (CEPA-Comprehensive Economic Partnership Agreement) வழங்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வது குறித்தும் இரு அமைச்சர்களும்இரு அதிகாரிகளும் விவாதித்ததாக கூறப்படுகிறது.

ADVERTISEMENT

மே 1, 2022 முதல் நடைமுறைக்கு வந்த UAE-India Cepa, 80 சதவீதத்திற்கும் அதிகமான தயாரிப்புகள் மீதான வரிகளைக் குறைத்தல் அல்லது நீக்குதல் மற்றும் 11 துறைகள் மற்றும் 100 க்கும் மேற்பட்ட துணைத் துறைகளில் அமீ்கத்தின் வழங்குநர்களுக்கான மேம்பட்ட சந்தை அணுகல் மூலம் இந்திய சந்தையில் நுழையும் UAE ஏற்றுமதிகளுக்கு அதிக அணுகலை வழங்குகிறது.

இரு நாடுகளும் வரும் ஆண்டுகளில் இருதரப்பு வர்த்தகத்தை 100 பில்லியன் டாலர்களாக உயர்த்த இலக்கு வைத்துள்ளதாகவும் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த மைல்கல், ஐக்கிய அரபு அமீ்ரகம் மற்றும் இந்தியாவுடனான ஆழமான வேரூன்றிய உறவுகள் மற்றும் பரஸ்பர மரியாதையை பிரதிபலிப்பதுடன், முதலீடுகள், புதுமைகள் மற்றும் நிபுணத்துவம் பரிமாற்றம் ஆகியவற்றிற்கு வழி வகுக்கும் என தெரிகிறது.

ADVERTISEMENT

இது உலகளாவிய வர்த்தக மையமாக ஐக்கிய அரபு அமீ்கத்தின் மூலோபாய முக்கியத்துவத்தையும், ஆற்றல்மிக்க பொருளாதார சக்தியாக இந்தியா உருவெடுத்ததையும் குறிப்பதாக இந்தியாவின் மின்னணு மற்றும் கணினி மென்பொருள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலின்  (Electronics and Computer Software Export Promotion Council-ESC) மண்டல இயக்குனரும், அல்மயா குழுமத்தின் பங்குதாரருமான கமல் வச்சானி கருத்து தெரிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel