ADVERTISEMENT

அமீரகம் முழுவதும் மருத்துவத்துறையில் வேலை பார்க்க இனி ஒரே லைசென்ஸ்.. விரைவில் அமலுக்கு வரும் நடைமுறை..!!

Published: 28 Jan 2025, 6:40 PM |
Updated: 28 Jan 2025, 9:13 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரிய மருத்துவ பணியாளர்களுக்கான லைசென்ஸ்களை வழங்குவதற்காக விரைவில் ஒருங்கிணைந்த தேசிய தளம் அறிமுகப்படுத்தப்படும் என்று அமீரகத்தின் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகத்தின் (MOHAP) உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

அதாவது சுகாதார மைய உரிமையாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தாளுநர்கள் (pharmacist), அதனுடன் தொடர்புடைய மருத்துவ வல்லுநர்கள் மற்றும் தொழில்நுட்ப ஊழியர்கள் உள்ளிட்ட சுகாதாரத் துறை சார்ந்தவர்களுக்கான இந்த தளம், லைசென்ஸ் நடைமுறைகளை தரப்படுத்தி, மீண்டும் மீண்டும் செய்ய வேண்டிய செயல்முறைகளை குறைத்து லைசென்ஸ் பெறுவதை விரைவுபடுத்துவதன் மூலம் பயனர் அனுபவத்தை மேம்படுத்தும் என்று கூறப்படுகிறது.

இந்த நெறிப்படுத்தப்பட்ட உரிமம் வழங்கும் செயல்முறை மருத்துவ வல்லுநர்கள் நாட்டின் பொது மற்றும் தனியார் சுகாதார மையங்கள் என எதிலும் வேலை செய்ய அனுமதிக்கும் என்றும் கூறப்படுகிறது. இதன் மூலம் ஒரு நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனம் மாறும் போதோ அல்லது ஒரு எமிரேட்டில் இருந்து மற்றொரு எமிரேட்டிற்கு வேலையை மாற்றும் போதோ மீண்டும் அதே செயல்முறையை செய்ய தேவையில்லை என்பது தெளிவாகியுள்ளது.

ADVERTISEMENT

இது குறித்து அதிகாரி வெளியிட்ட தகவல்களின் படி, “இது நாட்டின் சுகாதாரத் துறையில் ஒரு தேசிய திட்டமாகும், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள சுகாதார நிறுவனங்களிலிருந்து முயற்சிகளை ஒரு தளமாக இது ஒருங்கிணைக்கிறது. தற்பொழுது, நாட்டில் உள்ள ஒவ்வொரு சுகாதார நிறுவனமும் தங்கள் சொந்த தேவைகளின் அடிப்படையில் சுகாதார நிபுணர்களுக்கு லைசென்ஸ் வழங்குகிறது.

ஆனால், இந்த செயல்முறைகளை புதிய அமைப்புடன் ஒருங்கிணைத்து, மீண்டும் மீண்டும் செய்யக்கூடிய செயல்முறைகளை குறைத்து, நடைமுறைகளை தரப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்” என்று அமைச்சின் உரிமம் மற்றும் அங்கீகாரத் துறையின் செயல் இயக்குனர் அல்லா மன்சூர் யஹ்யா அவர்கள் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

ஒருங்கிணைந்த தளத்தின் சரியான வெளியீட்டு தேதி அறிவிக்கப்படவில்லை என்றாலும், தற்சமயம் சுகாதார நிறுவனங்களுடன் பணிபுரிவதாகவும், மேலும் இந்த முயற்சி அதன் இறுதி கட்டங்களில் இருப்பதால் விரைவில் செயல்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சுகாதாரத் தொழில்களின் உரிமங்களை ஒன்றிணைப்பதற்கான தேசிய தளம் சுகாதார வல்லுநர்கள் தங்கள் லைசென்ஸ்களை பெறுவதற்கு தேவையான நேரத்தையும் முயற்சியையும் கணிசமாகக் குறைக்கும் என்று யஹ்யா கூறியுள்ளார். மேலும், இது ஐக்கிய அரபு அமீ்கத்தில் உள்ள பொது மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தொழில் வல்லுநர்கள் எளிதில் பயிற்சி செய்ய அனுமதிக்கும், தடையற்ற மாற்றங்களை எளிதாக்கி சுகாதாரத் துறையில் செயல்திறனை மேம்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளார்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel