ADVERTISEMENT

GCC நாடுகளில் அதிக வாழ்க்கைச் செலவுள்ள நாடாக அமீரகம் முதலிடம்.. மலிவான நாடு எது தெரியுமா..??

Published: 19 Jan 2025, 10:05 AM |
Updated: 19 Jan 2025, 10:05 AM |
Posted By: Menaka

2025ஆம் ஆண்டுக்கான வாழ்க்கைச் செலவுக் குறியீட்டில் (cost of living index) வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (GCC) நாடுகளின் பட்டியலில் விலைவாசி உயர்வுகளுடன் ஐக்கிய அரபு அமீரகம் முதலிடத்தில் உள்ளது, அதைத் தொடர்ந்து பஹ்ரைன், பின்னர் கத்தார், சவுதி அரேபியா, குவைத் மற்றும் இறுதியாக ஓமன் ஆகியவை அடுத்தடுத்த இடத்தில் உள்ளன.

ADVERTISEMENT

இந்த வருடாந்திரக் குறியீடு, சராசரி வாடகை விலைகள், சராசரி வாழ்க்கைச் செலவுகள், சராசரி மளிகை விலைகள், சராசரி உணவக விலைகள் மற்றும் சராசரி நிகர சம்பளத்தைப் பொறுத்து உள்ளூர் நாணயத்தின் சராசரி வாங்கும் திறன் உட்பட, ஒவ்வொரு நாட்டிலும் வாழ்க்கைச் செலவுகளை மதிப்பிடுவதற்கான ஐந்து உலகளாவிய தரநிலைகளை அடிப்படையாகக் கொண்டு பட்டியலிட்டுள்ளது.

வாழ்க்கைச் செலவுக் குறியீட்டில் சராசரியாக 54.1 புள்ளிகளுடன் உலகளவில் 30வது இடத்திலும், வளைகுடா மற்றும் அரபு நாடுகளில் முதலிடத்திலும் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளது. அதேபோல், பஹ்ரைன் 48.3 சராசரி மதிப்பெண்ணுடன் வளைகுடாவில் இரண்டாவது இடத்திலும், அரபு உலகில் மூன்றாவது இடத்திலும், உலகளவில் 38வது இடத்திலும் உள்ளது. அதைத் தொடர்ந்து, கத்தார் 47.5 புள்ளிகளுடன் வளைகுடாவில் மூன்றாவது இடத்திலும், அரபு உலகில் நான்காவது இடத்திலும், உலகளவில் 40வது இடத்திலும் உள்ளது.

ADVERTISEMENT

சராசரியாக 41.9 புள்ளிகளுடன் வளைகுடாவில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ள சவுதி அரேபியா, அரபு உலகில் ஐந்தாவது இடத்திலும், உலகளவில் 56வது இடத்திலும் உள்ளது. இவற்றைத் தொடர்ந்து, குவைத் வளைகுடாவில் ஐந்தாவது இடத்திலும், அரபு நாடுகளில் ஆறாவது இடத்திலும், உலக அளவில் 60வது இடத்திலும் உள்ளது, இது மொத்தம் 40.4 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

2025 நாடுகளின் வாழ்க்கைச் செலவுக் குறியீட்டின் அடிப்படையில் ஓமான் மக்கள் வாழ்வதற்கு மலிவான வளைகுடா நாடாகக் கருதப்படுகிறது. இது சராசரியாக 39.8 புள்ளிகளுடன் வளைகுடாவில் ஆறாவது, அரபு உலகில் ஏழாவது மற்றும் உலகளவில் 62வது இடத்தில் உள்ளது. அதே நேரத்தில் அதிக வாழ்க்கைச் செலவு கொண்ட அரபு நாடுகளில் ஏமன் இரண்டாவது இடத்தையும், பாலஸ்தீனம் எட்டாவது இடத்தையும், லெபனான் ஒன்பதாவது இடத்தையும், சோமாலியா பத்தாவது இடத்தையும் பிடித்துள்ளன.

ADVERTISEMENT

சுவிட்சர்லாந்து, அமெரிக்க விர்ஜின் தீவுகள், ஐஸ்லாந்து, பஹாமாஸ், சிங்கப்பூர், ஹாங்காங், பார்படாஸ், நோர்வே, பப்புவா நியூ கினியா மற்றும் டென்மார்க் ஆகியவை முறையே அதிக வாழ்க்கைச் செலவு உள்ள நாடுகளின் பட்டியலில் முதன்மையான இடங்களை பிடித்துள்ளன.

மேலும், பாகிஸ்தான், லிபியா, எகிப்து, இந்தியா, ஆப்கானிஸ்தான், மடகாஸ்கர், பங்களாதேஷ், ரஷ்யா மற்றும் பராகுவே ஆகிய நாடுகள் இந்த குறியீட்டில் உள்ள மொத்தம் 139 நாடுகளில் வாழ மலிவான நாடுகளாக கண்டறியப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel