ADVERTISEMENT

அமீரகத்தில் வங்கிக்கணக்கு இல்லாதவர்களும் முன்கூட்டியே சம்பளம் பெறலாம்.. புதிய சேவை விரைவில்…

Published: 7 Jan 2025, 9:06 AM |
Updated: 7 Jan 2025, 9:07 AM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள வங்கிக் கணக்கில்லாத (unbanked) குடியிருப்பாளர்களின் உடனடி நிதித் தேவைகளை நிவர்த்தி செய்ய புதியதொரு சேவை அறிமுகம் செய்யப்படவுள்ளது. இந்த சேவையின் மூலம் அமீரகத்தில் பணிபுரியும் குடியிருப்பாளர்கள் சம்பள முன்பணத்தை பெறுதல், பணத்தை அனுப்புதல் மற்றும் தவணைகளில் செலுத்துதல் ஆகிய சேவைகளை விரைவில் அணுகலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

துபாயைத் தளமாகக் கொண்டு இயங்கும் அல் அன்சாரி ஃபைனான்சியல் சர்வீசஸ் மற்றும் ஃபின்டெக் நிறுவனமான ஹாலன் (Halan) ஆகியவற்றுக்கு இடையேயான கூட்டாண்மையின் விளைவாக இந்த சேவை விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. வங்கியில் இல்லாத குடியிருப்பாளர்களை இலக்காகக் கொண்ட இந்தச் சேவை, நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் கொண்ட தனிநபர்களுக்கான நிதிச் சுமையை எளிதாக்க, அதிக வட்டிக் கடனைச் சார்ந்திருப்பதைக் குறைக்க உதவும் என்று கூறப்படுகிறது.

முன்கூட்டிய சம்பளம்:

பல ஐக்கிய அரபு அமீரக குடியிருப்பாளர்கள் நாட்டில் உள்ள அனைத்து முக்கிய வங்கிகளாலும் வழங்கப்படும் முன்கூட்டிய சம்பள (salary-in-advance) வசதிகளைப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

ADVERTISEMENT

முன்னதாக, அபுதாபி இஸ்லாமிக் பேங்க், அபுதாபி கமெர்ஷியல் பேங்க், ராஸ் அல் கைமா பேங்க், யுனைடெட் அரபு பேங்க், அஜ்மான் பேங்க், ஷார்ஜா இஸ்லாமிக் பேங்க் மற்றும் எமிரேட்ஸ் NBD ஆகியவை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு முன்கூட்டிய சம்பள வசதிகளை வழங்கின. இவற்றில் இஸ்லாமிக் பேங்க் சமீபத்தில் இந்த வசதியை நிறுத்துவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

SNPL சேவை

இந்நிலையில் அல் அன்சாரி ஃபைனான்சியல் சர்வீசஸ் அறிமுகம் செய்துள்ள இந்த SNPL (send now, pay later) சேவையானது, வாடிக்கையாளர்கள் உடனடியாக குடும்ப உறுப்பினர்களுக்கு அதிக அளவு பணத்தை அனுப்பவும், காலப்போக்கில் தவணைகளில் திருப்பிச் செலுத்தவும் அனுமதிக்கிறது.

ADVERTISEMENT

உலக வங்கி வெளியிட்ட தரவுகளின் படி, 2023இல் ஐக்கிய அரபு அமீரகக் குடியிருப்பாளர்களின் பணம் அனுப்பிய தொகை சுமார் 38.5 பில்லியன் டாலராக இருந்தது, இது அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக ($85.5 பில்லியன்) உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

அதேபோல், அமீரகத்தில் டிசம்பர் 2024 இல் தொடங்கப்பட்ட ஹலன் ஆப், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள 3.7 மில்லியனுக்கும் அதிகமான குறைந்த வங்கி வெளிநாட்டவர்களின் தேவைகளை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டு, ஊழியர்கள் மற்றும் வணிகங்களுக்கான சம்பள முன்பண தீர்வை வழங்குகிறது. அத்துடன் நாட்டில் உள்ள பெரும்பாலான வெளிநாட்டவர்கள் பாரம்பரிய வங்கி சேவைகளை அணுகுவதில் அடிக்கடி சவால்களை எதிர்கொள்ளும் நிலையில், அவர்களுக்கு சிறந்த தீர்வாக இது இருக்கும் என்று கூறப்படுகிறது.

‘Halan Advance’ நிறுவனம், ஐக்கிய அரபு அமீரகத்தில் 2024 ஏப்ரல் முதல் 40,000 க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களைப் பெற்ற நிலையில், 2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் 250,000 வாடிக்கையாளர்களை அடைந்து 350 மில்லியன் திர்ஹம்களை கடனாக வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel