ADVERTISEMENT

UAE விசிட் விசாக்களுக்கான ஒப்புதல் விகிதம் அதிகரிப்பு.. பயண முகவர்கள் தகவல்..!!

Published: 6 Jan 2025, 11:30 AM |
Updated: 6 Jan 2025, 11:30 AM |
Posted By: Menaka

அண்மையில், பெரும்பான்மையான UAE விசிட் விசாக்கள் நிராகரிக்கப்படுவதாக பயண ஏஜென்சிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்பொழுது விண்ணப்பதாரர்கள் தேவையான அனைத்து ஆவணங்களையும் சரியாக சமர்ப்பிப்பதால், விசிட் விசாக்களுக்கான ஒப்புதல் அதிகரித்து வருவதாக அமீரகத்தின் பயண முகவர்கள் கூறுகின்றனர்.

ADVERTISEMENT

இது குறித்து அரபு உலக சுற்றுலாத்துறையின் செயல்பாட்டு மேலாளர் ஷெராஸ் ஷரஃப் அவர்கள் கூறுகையில், “2024 ஆம் ஆண்டின் கடைசி காலாண்டில் விசிட் விசாக்களின் ஒப்புதல் விகிதம் சுமார் 5-6 சதவீதம் உயர்ந்துள்ளது. இது பாரம்பரியமாக காலாண்டில் பதிவாகும் 1-2 சதவிகிதத்தை விட அதிகமாகும்” என்று கூறியுள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வரும் பார்வையாளர்கள் சட்டவிரோதமாக கூடுதல் நாட்கள் தங்குவதைத் தடுக்கும் நோக்கில், விசிட் விசா விண்ணப்பதாரர்கள் ரிட்டர்ன் டிக்கெட், தங்குமிடத்திற்கான சான்று மற்றும் குறிப்பிட்ட தொகையை கையில் அல்லது அக்கவுண்டில் எடுத்துச் செல்ல வேண்டும் என்று அமீரக அரசால் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

இந்தச் சூழலில், கடந்த சில நாட்களாகவே கட்டாயத் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தவறிய விண்ணப்பதாரர்களின் பெரும்பாலான விசிட் விசாக்கள் தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டன. இருப்பினும், அதிகாரிகள் மற்றும் பயண நிறுவனங்களின் இடைவிடாத விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மூலம், பயணிகளை விதிமுறைகளைக் கடைபிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டு வந்தது.

ஐக்கிய அரபு அமீரகத்தில், குறிப்பாக துபாய், ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான சுற்றுலாப் பயணிகளைத் தன்வசம் ஈர்க்கிறது. வரலாற்று ரீதியாக, துபாய் ஷாப்பிங் பெஸ்டிவலின் போது பயணிகளின் வருகையில் எழுச்சியைக் கண்டதாகவும், வரும் மாதங்களில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் 20-25 சதவீதம் அதிகரிப்பை எதிர்பார்ப்பதாகவும் Musafir.com இன் B2C இன் உதவித் துணைத் தலைவர் ரிகின் ஷெத் என்பரும் கூறியுள்ளார்.

ADVERTISEMENT

விசா நிராகரிக்கப்படுவது ஏன்?

விண்ணப்பதாரர்கள் உண்மையான ஆவணங்களை இணைத்தால், அவர்களின் விசாக்கள் நிராகரிக்கப்படுவதற்கு எந்த காரணமும் இல்லை என்று கூறிய ரிக்கின் ஷெத், எனவே, இப்போது ஒப்புதல் விகிதங்கள் கணிசமாக மேம்பட்டுள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.

அதிகாரிகளின் கூற்றுப்படி, உறுதிப்படுத்தப்பட்ட விமான ரிட்டர்ன் டிக்கெட்டுகள், ஹோட்டல் முன்பதிவுகள் அல்லது குடியிருப்பு கட்டிட குத்தகை ஒப்பந்தங்கள் மற்றும் குடியிருப்பாளரின் எமிரேட்ஸ் ஐடி உட்பட உறவினர்களுடன் தங்கியிருக்கும் போது தங்குவதற்கான சான்றுகள் போன்ற தேவையான அனைத்து ஆவணங்களையும் வழங்கும் விண்ணப்பதாரர்கள் விசா அனுமதிகளைப் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

எவ்வாறாயினும், பல பயணிகளின் விசிட் விசாக்கள், குறிப்பாக தெற்காசியாவைச் சேர்ந்தவர்கள், உறுதிப்படுத்தப்பட்ட ரிட்டர்ன் டிக்கெட் அல்லது செல்லுபடியாகும் ஹோட்டல் முன்பதிவுகளை வழங்க முடியாததால் சில நேரங்களில் நிராகரிக்கப்பட்டதாகவும் பயணத்துறை நிர்வாகிகள் கூறுகின்றனர்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel