ADVERTISEMENT

துபாய்: புர்ஜ் கலீஃபாவின் புத்தாண்டு கொண்டாட்டத்தை தவறவிட்டவர்களா?? லேசர் மற்றும் லைட் ஷோவை தினமும் காண வாய்ப்பு..!!

Published: 8 Jan 2025, 12:18 PM |
Updated: 8 Jan 2025, 12:18 PM |
Posted By: Menaka

புத்தாண்டுக் கொண்டாட்டத்திற்காக துபாய் முழுவதும் பல்வேறு இடங்களில் வானவேடிக்கை மற்றும் லேசர் காட்சிகள் நடத்தப்பட்டாலும், உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலீஃபாவில் ஒளிரும் விளக்குகள், வான வேடிக்கை மற்றும் லேசர் காட்சிகளுடன் வண்ணமயமாக புத்தாண்டை வரவேற்பது அலாதியான அனுபவத்தைக் கொடுக்கும்.

ADVERTISEMENT

அத்தகைய மிகச்சிறந்த இடத்தில் புத்தாண்டுக் கொண்டாட்டங்களை காண தவறவிட்டவர்களாக நீங்கள் இருந்தால், புர்ஜ் கலீஃபாவின் இந்த சிறந்த காட்சிகளை காண்பதற்கு அடுத்த புத்தாண்டு வரை காத்திருக்க தேவையில்லை. ஏனெனில் புர்ஜ் கலீஃபாவில் புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போது நடத்தப்பட்ட லேசர் மற்றும் லைட் ஷோ பார்வையாளர்களுக்காக தினமும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த லேசர் மற்றும் லைட் ஷோ வரும் மார்ச் 2025 இறுதி வரை இயங்கும் என்பதால், பார்வையாளர்கள் தினந்தோறும் லேசர் மற்றும் லைட் ஷோக்களை கண்டுகளிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அதனடிப்படையில் தினமும் இரவு 8:30, 9.15 மற்றும் 10.15 மணி ஆகிய நேரங்களில் நவீன தொழில்நுட்பம் மற்றும் கலைத்திறன் ஆகியவற்றின் சரியான கலவையை வழங்கும் சிறப்பு லேசர் மற்றும் லைட் ஷோ நிகழ்ச்சிகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

ADVERTISEMENT