ADVERTISEMENT

சாலை விதிகளை மதித்து பாதுகாப்பாக வாகனம் ஓட்டியதற்கு பரிசு.. ஓட்டுநர்களை ஆச்சரியப்படுத்திய அமீரக காவல்துறை…

Published: 5 Feb 2025, 11:01 AM |
Updated: 5 Feb 2025, 11:06 AM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில் போக்குவரத்து விதிகளைக் கடைபிடித்ததன் மூலம், சாலை பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு பங்களித்த சிறந்த ஓட்டுநர்களுக்கு அதிகாரிகள் வெகுமதி அளித்து ஆச்சரியப்படுத்தியுள்ளனர். அபுதாபியில் ஒவ்வொரு ஆண்டும் சாலைப் பயனர்களிடையே நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்துவதற்கும் சாலை பாதுகாப்பை ஊக்குவிப்பதற்கும் சாலை விதிகளை முறையாகக் கடைபிடிக்கும் ஓட்டுநர்களுக்கு பரிசு வழங்கி கௌரவிப்பது வழக்கமாகும்.

ADVERTISEMENT

முந்தைய ஆண்டுகளில், இலவச எரிபொருள் அட்டைகள், ‘ஸ்டார் ஆப் ஹானர்’ பேட்ஜ்கள் மற்றும் பெரிய டிவி செட்கள் போன்றவற்றை பரிசாக வழங்கி ஓட்டுநர்களை அங்கீகரித்த நிகழ்வுகளும் உண்டு. அதேபோல், சமீபத்தில் அல் அய்னில் நடந்த ‘ஹாப்பினஸ் பட்ரோல் (happiness patrol)’ முயற்சியில், 60 ஓட்டுநர்களுக்கு பரிசுப் பைகளை வழங்கிய அதிகாரிகள் வழங்கியுள்ளனர்.

 

ADVERTISEMENT

இது குறித்து அல் அய்னின் போக்குவரத்து நிர்வாகி பாதுகாப்பு ரோந்துப் பணியில் உள்ள போக்குவரத்து விவகாரங்களின் துணை இயக்குநரகத்தின் மேஜர் மாதர் அப்துல்லா அல் முஹிரி அவர்கள் பேசுகையில், “அபுதாபி காவல்துறையினர் பாதுகாப்பாக வாகனம் ஓட்டுபவர்களுக்கு தொடர்ந்து பரிசளிப்பார்கள், எனவே அவர்கள் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக பணியாற்ற முடியும்” என்று தெரிவித்துள்ளார். அவரைத் தொடர்ந்து, மற்றொரு அதிகாரி அமீரக சாலைகளை பாதுகாப்பானதாக மாற்ற உதவுவதில் ஓட்டுநர்களின் உறுதிப்பாட்டை பாராட்டியுள்ளார்.

ADVERTISEMENT

“இத்தகைய முயற்சிகள் விபத்துக்களைக் குறைக்கவும் உயிர்களைப் பாதுகாக்கவும் உதவும்” என்று அல் அய்னில் போக்குவரத்து மற்றும் பாதுகாப்புத் துறையின் இயக்குனரான கோல் ஜாபர் சயீவன் மன்சூரி குறிப்பிட்டுள்ளார்.

மற்ற எமிரேட்களில் உள்ள காவல்துறையினரும் பாதுகாப்பான ஓட்டுநர்களை கௌரவித்து  வருகின்றனர். 2024 ஆம் ஆண்டில், துபாயில் 22 வாகன ஓட்டிகள் ஒரு போக்குவரத்து குற்றத்தை கூட செய்யாததற்காகவும் கடந்த மூன்று ஆண்டுகளில் விபத்தை ஏற்படுத்தாமல் இருந்ததற்காகவும் அங்கீகரிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel