ADVERTISEMENT

அமீரகத்தில் தங்கியிருக்கும் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு எவ்வளவு காலம் ஸ்பான்சர் செய்யலாம்?? வயது வரம்பு என்ன?

Published: 19 Feb 2025, 7:07 PM |
Updated: 19 Feb 2025, 7:07 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தில் ரெசிடென்ஸி விசாவில் தங்கியிருக்கும் பெற்றோர்கள் அவர்களது குழந்தைகளுக்கு எவ்வளவு காலம் ஸ்பான்சர் செய்யலாம்? நாட்டில் மகன்களுக்கும் மகள்களுக்கும் ஸ்பான்சர் செய்வதற்கான வயது வரம்பு இருக்கிறதா? இதுபோன்ற கேள்விகள் அமீரகத்தில் தங்கியிருக்கும் ஒவ்வொரு வெளிநாட்டு பெற்றோர்களுக்கும் இருக்கலாம். இது தொடர்பான விபரங்களைப் பின்வருமாறு பார்க்கலாம்.

ADVERTISEMENT

வெளிநாட்டவரின் என்ட்ரி மற்றும் ரெசிடென்ஸி பற்றிய 2021 ஆம் ஆண்டின் ஆணை எண் (29) மூலம் கூட்டாட்சி சட்டத்தின் 9 வது பிரிவின் படி, ஐக்கிய அரபு அமீரகத்தில் ரெசிடென்ஸி பெர்மிட் பெற்ற ஒரு வெளிநாட்டவர் அவரது குடும்ப உறுப்பினர்களை நாட்டில் தங்க வைக்க ஸ்பான்சர் செய்ய முடியும். இந்த சட்டம் “நாட்டில் ரெசிடென்ஸி பெர்மிட் பெற்ற ஒரு வெளிநாட்டவர் தனது குடும்ப உறுப்பினர்களை இந்தச் சட்டத்தின் நிர்வாக ஒழுங்குமுறை ஆணையின் மூலம் நிர்ணயித்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு இணங்க, தனது குடும்ப உறுப்பினர்களைக் கொண்டுவரலாம்” என்று கூறுகிறது.

இந்த நிபந்தனைகள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது:

ADVERTISEMENT
  • திருமணமாகாத மகள்: மகள்களுக்கு திருமணமாகாத வரை, வயது வரம்பு இல்லாமல் அவர்களுக்கு பெற்றோர் ஸ்பான்சர் செய்யலாம்.
  • மகன்: மகன் 25 வயதாகும் வரை பெற்றோர் ஸ்பான்சர் செய்யலாம். அதன்பிறகு, அவருக்கு சிறப்புத் தேவைகள் இல்லாவிட்டால் அவருக்கு இனி பெற்றோர் ஸ்பான்சர் செய்ய முடியாது.
  • சிறப்பு உதவித் தேவைப்படும் குழந்தைகள்: உங்கள் பிள்ளைக்கு சிறப்புத் தேவைகள் இருந்தால், அவர்களின் வயதைப் பொருட்படுத்தாமல் அவர்களுக்கு ஸ்பான்சர் செய்ய முடியும்.

ICPயின் படி, ஸ்பான்சரின் சொந்த விசாவின் செல்லுபடியாகும் அதே காலத்திற்கு குடும்ப உறுப்பினர்களுக்கான ரெசிடென்ஸி பெர்மிட் செல்லுபடியாகும். எனவே, ஸ்பான்சரான பெற்றோரின் விசா இரண்டு ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் என்றால், குழந்தைகளின் விசாக்களும் இரண்டு ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். குடும்ப உறுப்பினர்களுக்கான ரெசிடென்ஸி செல்லுபடியாகும் காலம் குடும்பத் தலைவரின் ரெசிடென்ஸி செல்லுபடியாகும் காலத்தை விட அதிகமாக இருக்கக்கூடாது என்று கூறப்படுகிறது.

கூடுதல் தெளிவுபடுத்தல்களுக்கு, நீங்கள் துபாயின் பொது ரெசிடென்ஸ் மற்றும் வெளிநாட்டினர் விவகார இயக்குநரகம் (GDRFA) அல்லது அடையாளம், குடியுரிமை, சுங்கம் மற்றும் துறைமுகப் பாதுகாப்புக்கான கூட்டாட்சி ஆணையத்தை (ICP) தொடர்பு கொள்ளலாம்.

ADVERTISEMENT

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel