அமீரகத்தில் வசிப்பவர்கள் மலிவான விமான கட்டணத்தில் பயணம் செய்வது பற்றி யோசித்துக்கொண்டிருந்தால், தள்ளுபடி விலையில் விமான முன்பதிவு செய்வதற்கு இது சரியான நேரமாகும். ஏனெனில், ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா எமிரேட்டை தளமாகக் கொண்டு இயங்கும் ஏர் அரேபியா விமான நிறுவனம் பயணிகளுக்கு சூப்பர் சீட் விற்பனை தொடங்கியுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திகளின்படி, பட்ஜெட் கேரியரான ஏர் அரேபியா நிறுவனம் அதன் முழு நெட்வொர்க்கிலும் சுமார் 500,000 இருக்கைகளை 129 திர்ஹம்ஸ் முதல் தள்ளுபடி செய்யப்பட்ட கட்டணங்களில் வழங்குகிறது என்பது தெரிய வந்துள்ளது.
இந்த மாபெரும் விற்பனை பிப்ரவரி 17 முதல் மார்ச் 2 வரை நீடிக்கும் என்றும், செப்டம்பர் 1, 2025 மற்றும் மார்ச் 28, 2026 க்கு இடையிலான பயணங்களுக்கு இது செல்லுபடியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது பயணிகளுக்கு தங்கள் பயணங்களைத் திட்டமிட நிறைய நேரம் அளிக்கிறது எனவும் கூறப்பட்டுள்ளது.
ஏர் அரேபியா அமீரகத்தில் இருக்கக்கூடிய அபுதாபி, ஷார்ஜா மற்றும் ராஸ் அல் கைமா விமான நிலையங்களில் இருத்து பல்வேறு விமானங்களுடன், பயணிகளை மத்திய கிழக்கு, ஆசியா மற்றும் ஐரோப்பாவுடன் 100 க்கும் மேற்பட்ட இடங்களுடன் இணைக்கிறது. இந்த ஏர் அரேபியாவில் தங்கள் விமானங்களை முன்பதிவு செய்ய விரும்பும் பயணிகள் www.airarabia.com ஐப் பார்வையிட்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel