ADVERTISEMENT

UAE: சுற்றுலா துறையை மேம்படுத்த அஜ்மானின் உக்தி.. பிரத்யேக நடைபாதை, சைக்கிளிங் டிராக் உள்ளடக்கிய மெகா பீச் திட்டம்…

Published: 7 Feb 2025, 2:05 PM |
Updated: 7 Feb 2025, 2:06 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஒவ்வொரு எமிரேட்டும் அவற்றின் சுற்றுலாத்துறையை மேம்படுத்த பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அந்தவகையில், அஜ்மான் எமிரேட் அதன் நிலையான நகர்ப்புற மேம்பாட்டு மூலோபாயத்தின் ஒரு பகுதியாக, கடற்கரை பகுதியின் மொத்த பரப்பளவை 165,000 அதிகரிப்பதன் மூலம் 220,000 சதுர மீட்டராக விரிவுபடுத்தி வருகிறது.

ADVERTISEMENT

எமிரேட்டின் இந்த மெகா பீச் திட்டம் குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாவாசிகளுக்கான பொது இடங்களை மேம்படுத்த 300,000 சதுர மீட்டர் பசுமை இடங்களை உள்ளடக்கியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், ஒரு பிரத்யேக பாதசாரி நடைபாதை மற்றும் கார்னிச்சில் பசுமை மண்டலங்கள் அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை தவிர,  2,500 மீட்டர் நீளமுள்ள சைக்கிள் ஓட்டுதல் பாதை இந்த திட்டத்தின் மற்றொரு முக்கிய அம்சமாகக் கருதப்படுகிறது.

அஜ்மான் முனிசிபாலிட்டி மற்றும் திட்டமிடல் துறையின் தலைவர் ஷேக் ரஷீத் பின் ஹுமைத் அல் நுயைமி மற்றும் அஜ்மானின் உள்கட்டமைப்புத் துறையின் தலைமை நிர்வாக அதிகாரி முஹம்மது பின் ஒமைர் அல் முஹைரி ஆகியோர் கடற்கரை திட்டத்தை ஆய்வு செய்த போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்து அல் முஹைரி பேசிய போது, “இந்த திட்டம் ஓய்வு மற்றும் விளையாட்டு நடவடிக்கைகள் இரண்டையும் பூர்த்தி செய்யும் நவீன, நிலையான நகர்ப்புற இடங்களை உருவாக்கும் நமது தலைமையின் பார்வையுடன் ஒத்துப்போகிறது” என்று கூறியுள்ளார்.

ADVERTISEMENT

அவரது கூற்றுப்படி, இந்தத் திட்டம் பசுமைப் பகுதிகள் மற்றும் விளையாட்டு வசதிகளை ஒருங்கிணைப்பதன் மூலம், அஜ்மானின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதையும், ஒரு பொழுதுபோக்கு இடமாக உயர்த்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

சுற்றுச்சூழலுக்கு உகந்த சுற்றுலாவை ஊக்குவித்தல்

திட்டத்தின் முதல் மற்றும் இரண்டாவது கட்டங்கள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன என்பதை உறுதிப்படுத்திய அல் முஹைரி, இறுதி கட்டத்தை மார்ச் 2025க்குள் முடிக்க  இலக்காகக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், நிலப்பரப்பை பராமரித்தல் மற்றும் அழகுபடுத்தும் முயற்சிகள் தொடரும் என்றும், ஆகஸ்ட் 2025 க்குள் கூடுதல் பணிகள் முடிக்கப்படும் என்பதையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

ADVERTISEMENT

இந்த முயற்சி அஜ்மானின் பரந்த நகர்ப்புற மேம்பாட்டு மூலோபாயத்தின் ஒரு பகுதியாகும், அதன் கடற்கரையை விரிவுபடுத்துதல், சுற்றுச்சூழலுக்கு உகந்த சுற்றுலாவை ஊக்குவித்தல் மற்றும் பொழுதுபோக்கு இடங்களுக்கான பொது அணுகலை மேம்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த திட்டம் அஜ்மானில் உள்ளூர் சுற்றுலா மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அத்துடன் வணிகங்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் கூறப்படுகிறது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel