ADVERTISEMENT

அபுதாபி இந்து கோவிலின் முதலாம் ஆண்டு விழா புனித சடங்குகள், சிறப்பு பிரார்த்தனைகளுடன் கொண்டாடப்படும் என அறிவிப்பு.. பார்வையாளர்கள் முன்பதிவு செய்யலாம் எனவும் தகவல்..!!

Published: 1 Feb 2025, 5:29 PM |
Updated: 1 Feb 2025, 5:29 PM |
Posted By: Menaka

மத்திய கிழக்கின் முதல் பாரம்பரிய இந்து கற்கோவிலான அபுதாபியில் உள்ள BAPS இந்து மந்திர், அதன் முதல் ஆண்டு நிறைவை ஞாயிற்றுக்கிழமை முதல் பல பிரமாண்டமான கொண்டாட்ட நிகழ்வுகள் மற்றும் பாரம்பரிய சடங்குகளுடன் கொண்டாட உள்ளதாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அபுதாபியின் அபு முரைக்காவில் அமைந்துள்ள இந்த கோயில் கடந்த பிப்ரவரி 14, 2024 அன்று சுவாமிநாராயண் சன்ஸ்தாவின் தற்போதைய ஆன்மீக குருவான மஹந்த் சுவாமி மகாராஜ் மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரால் திறந்து வைக்கப்பட்டது.

பிப்ரவரி 14ஆம் தேதிக்கு இன்னும் இரண்டு வாரங்கள் இருந்தாலும், ஆண்டுவிழாவைக் குறிக்கும் முதல் ‘படோட்சவ்’ புனித சடங்கானது, ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என்று கோவிலின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள தகவல்களின் படி, ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் விழாக்களில் மத விழாக்கள் முதல் கலாச்சார நிகழ்ச்சிகள் வரையிலான நடவடிக்கைகள் அடங்கும் என கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும், அவர் வெளியிட்ட அறிக்கையில், “அபுதாபியின் மையத்தில் உள்ள ஒரு வரலாற்று மற்றும் ஆன்மீக அடையாளமான BAPS இந்து மந்திரின் முதல் ஆண்டு நிறைவைக் குறிப்பதில் அனைவரையும் எங்களுடன் சேர அழைக்கிறோம். ஒன்றாக, கலாச்சாரங்களை ஒன்றிணைக்கும் மற்றும் தலைமுறைகளை ஊக்குவிக்கும் இந்த மைல்கல்லைக் கொண்டாடுவதில் எங்கள் பக்தி, நன்றியுணர்வு மற்றும் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவோம்” என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அவரது கூற்றுப்படி, இந்த நிகழ்வுகள் அனைத்து தேசிய இனங்களுக்கும் திறந்திருக்கும், எனவே, ஆர்வமுள்ள நபர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், இந்த முதல் ஆண்டுவிழா கொண்டாட்டங்கள் பிப்ரவரி 16 அன்று ‘The Day of Gratitude’  விழாவுடன் முடிவடையும் என்று கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel