ADVERTISEMENT

துபாய்: விற்பனைக்கு வரவிருக்கும் உலகின் இரண்டாவது உயரமான கட்டிடம் புர்ஜ் அஸிஸி..!! 2028ம் ஆண்டுக்குள் கட்டிமுடிக்கப்படும் என அறிவிப்பு..

Published: 19 Feb 2025, 7:58 AM |
Updated: 19 Feb 2025, 7:59 AM |
Posted By: Menaka

உலகின் இரண்டாவது உயரமான கட்டிடமாக மாறவுள்ள துபாயின் புர்ஜ் அஸிஸி கட்டிடம், இன்று (பிப்ரவரி 19) ஏழு நகரங்களில் விற்பனைக்குக் கிடைக்கும் என்று துபாயில் உள்ள முன்னணி டெவலப்பரான அஸிஸி டெவலப்மென்ட்ஸ் வெளிப்படுத்தியுள்ளது. இது குறித்து அசிசி டெவலப்மென்ட்ஸ் வெளியிட்ட அறிக்கையில், 725 மீட்டர் உயரமுள்ள இந்த கட்டிடம் துபாய் (கான்ராட் ஹோட்டல்), ஹாங்காங் (தி பெனிசுலா), லண்டன் (தி டார்செஸ்டர்), மும்பை (JW மேரியட் ஜூஹு), சிங்கப்பூர் (மரினா பே சாண்ட்ஸ்), சிட்னி (ஃபோர் சீசன்ஸ் ஹோட்டல்) மற்றும் டோக்கியோ (பேலஸ் ஹோட்டல்) ஆகிய இடங்களில் விற்பனை செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

துபாயின் பிரதான சாலையான ஷேக் சையத் சாலையில் கட்டி முடிக்கப்படவுள்ள இந்த கட்டிடம் குடியிருப்பு, ஹோட்டல், சில்லறை விற்பனை மற்றும் பொழுதுபோக்கு இடங்களை வழங்கும். சுமார் 131-க்கும் மேற்பட்ட மாடிகளைக் கொண்டு கட்டப்பட்டு வரும் இந்த வானுயர் கட்டிடம் 2028 ஆம் ஆண்டுக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து அசிசி டெவலப்மென்ட்ஸின் நிறுவனர் மற்றும் தலைவரான மிர்வாய்ஸ் அசிசி பேசிய போது, “புர்ஜ் அசிசி போன்ற திட்டங்கள் ஒரு தலைமுறைக்கு ஒரு முறை மட்டுமே நடக்கும். இந்த கட்டிடம் ஒரு கட்டமைப்பு மட்டுமல்ல; இது துபாயின் வளர்ந்து வரும் உலகளாவிய செல்வாக்கிற்கான பிரதிபலிப்பு” என்று கூறி தனது உற்சாகத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

ADVERTISEMENT

துபாயின் ப்ராப்பர்டி மார்க்கெட் கடந்த நான்கு ஆண்டுகளில் இதுவரை இல்லாத அதிகளவு தேவையைக் கண்டுள்ளது, குறிப்பாக ஆடம்பர மற்றும் அதி-ஆடம்பர பிரிவுகளில், அதிக விலைகள் மற்றும் வாடகைகளுக்கு வழிவகுத்ததாக ரியல் எஸ்டேட் நிர்வாகிகள் கூறுகிறார்கள். சொத்து ஆய்வாளர்களின் கூற்றுப்படி, 2024 ஆம் ஆண்டில், துபாய் 522.5 பில்லியன் திர்ஹம்ஸ் மதிப்புள்ள 180,987 பரிவர்த்தனைகளுடன் சாதனை படைத்தது என்றும், இது முந்தைய ஆண்டை விட 36.5% அதிகமாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.

துபாயும் வானுயர் கட்டிடங்களும்

ஸ்கைஸ்கிராப்பர் சென்டரின் தரவுகளின்படி, துபாயில் 300 மீட்டரை விட உயரமான 33 கட்டிடங்கள் உள்ளன, இது உலகளவில் எந்த நகரத்திலும் இல்லாத அளவுக்கு அதிகமாகும்.

ADVERTISEMENT

மேலும், உலகளவில் 100 மிக உயரமான கட்டிடங்களில், துபாய் 14 மிக உயரமான வானளாவிய கட்டிடங்களைக் கொண்டுள்ளது. அவை புர்ஜ் கலீஃபா, மெரினா 101, பிரின்சஸ் டவர், 23 மெரினா, உயரடுக்கு குடியிருப்பு, அட்ரஸ் பவுல்வர்டு, சீல் டவர், அல்மாஸ் டவர், கெவோரா ஹோட்டல், II ப்ரிமோ டவர், JW மேரியட் மார்க்விஸ் ஹோட்டல் டவர் 1, JW மேரியட் மார்க்விஸ் ஹோட்டல் டவர் 2, எமிரேட்ஸ் டவர் ஒன், மற்றும் தி டார்ச் போன்றவையாகும்.

 

என்னவெல்லாம் இருக்கும் தெரியுமா?

முன்னதாக அசிசி டெவலப்மென்ட்ஸ் வெளியிட்ட வெளியிட்ட தகவல்களில், இந்த வானுயர் கோபுரத்தில் ஏழு கலாச்சார கருப்பொருள்கள் மற்றும் பென்ட்ஹவுஸ் உட்பட பல்வேறு குடியிருப்புகள், 7 ஸ்டார் ஹோட்டல், அப்பார்ட்மெண்ட் மற்றும் ஹாலிடே ஹோம் ஆகியவை இடம்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நலவாழ்வு மையங்கள், நீச்சல் குளங்கள், சானா (sauna), தியேட்டர்கள், ஜிம்கள், மினி சந்தைகள், குடியிருப்பாளர் ஓய்வறைகள், குழந்தைகள் விளையாடும் பகுதி போன்ற பல வசதிகளையும் Burj Azizi வழங்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

இவை தவிர, இந்த கட்டிடத்தல் ஏழு தளங்களில் ஒரு சில்லறை விற்பனை மையம், ஒரு ஆடம்பர பால்ரூம் மற்றும் ஒரு பீச் கிளப் ஆகியவை அடங்கும் என்றும், இந்த கட்டிடம் பல உயர்தர F&B விருப்பங்களையும், மற்ற தனித்துவமான வசதிகளையும் கொண்டிருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, உலகின் மிக உயர்ந்த ஹோட்டல் லாபி, மிக உயர்ந்த நைட் க்ளப், மிக உயர்ந்த கண்காணிப்பு தளம், துபாயில் மிக உயர்ந்த உணவகம் மற்றும் மிக உயர்ந்த ஹோட்டல் அறை போன்றவை இருப்பதால் Burj Azizi பல உலக சாதனைகளைப் படைக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel