ADVERTISEMENT

அமீரகத்தில் பெற்றோரின் விசா ரத்து செய்யப்பட்ட பிறகு பிள்ளைகள் சட்டப்பூர்வமாக பள்ளி ஆண்டை முடிக்க முடியுமா?

Published: 18 Feb 2025, 9:10 AM |
Updated: 18 Feb 2025, 9:23 AM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தில் விசா ரத்து செய்யப்பட்ட பின்னர் நாட்டில் தங்குவது சட்டவிரோதமாகும். அந்தவகையில், அமீரகத்தில் பெற்றோரின் விசா ரத்து செய்யப்படும் போது, அவர்களின் குழந்தைகள் சட்டப்பூர்வமாக மீதமுள்ள கல்வியாண்டை முடிக்க நாட்டில் தங்குவதற்கு அனுமதி கிடைக்குமா? இல்லையென்றால், அவர்களும் படிப்பை முடிக்காமல் நாட்டை விட்டு வெளியேற வேண்டுமா? இதுபோன்ற சந்தேகங்கள் வெளிநாட்டவர்களுக்கு இருக்கலாம். இது தொடர்பான சில விபரங்களைப் பின்வருமாறு பார்க்கலாம்.

ADVERTISEMENT

ஐக்கிய அரபு அமீரகத்தின் 2021 ஆம் ஆண்டின் பெடரல் ஆணை-சட்ட எண் (29) இன் 11 வது பிரிவின் படி, விசாக்கள் அல்லது ரெசிடென்ஸி விசாக்கள் ரத்துசெய்யப்பட்ட அல்லது புதுப்பிக்கப்படாமல் காலாவதியான விசாக்களுடன் நாட்டில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களுக்கு, அவர்கள் நாட்டில் தங்கும் ஒவ்வொரு கூடுதல் நாளும் அபராதத்திற்கு உட்படுத்தப்படுவார்கள். மேலும், 2022 ஆம் ஆண்டின் அமைச்சரவை தீர்மானம் எண் (65) இன் 54 (3) வது பிரிவு, குடும்ப உறுப்பினர்களின் ரெசிடென்ஸி பெர்மிட் ஸ்பான்சரின் விசா காலத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும் என்று கூறுகிறது.

அதாவது, ஐக்கிய அரபு அமீரகத்தில், ஒரு குடும்ப உறுப்பினரின் ரெசிடென்ஸி விசா ஸ்பான்சரின் (குடும்பத்தின் தலைவர்) விசாவுடன் பிணைக்கப்பட்டுள்ளது. எனவே, ஸ்பான்சரின் ரெசிடென்ஸி விசா காலாவதியாகும்போது, ​​குடும்ப உறுப்பினர்களின் விசாக்களும் சமீபத்தில் வழங்கப்பட்டிருந்தாலும் காலாவதியாகும்.

ADVERTISEMENT

மேலும், ஒரு ரெசிடென்ஸி விசா ரத்து செய்யப்பட்டவுடன், ஒரு தனிநபர் தனது விசா ரத்து ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சலுகை காலம் வரை தங்க அனுமதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்த ஆவணம் பொதுவாக துபாயின் பொது ரெசிடென்ஸ் மற்றும் வெளிநாட்டினர் விவகார இயக்குநரகம் (GDRFA) மூலம் வழங்கப்படுகிறது.

அமீரகத்தில் ரெசிடென்ஸி விசா ரத்து செய்யப்பட்டால், நீங்கள் வெளியேறுவதற்கு முன்பு நாட்டில் தங்குவதற்கு பொதுவாக 30 நாள் சலுகை காலம் உள்ளது. இருப்பினும், இந்த கால அளவு மாறுபடலாம், எனவே விசா ரத்து அறிவிப்பில் குறிப்பிட்ட விவரங்களை சரிபார்க்க வேண்டியது அவசியம். ஸ்பான்சரின் பிள்ளைகளைப் பொறுத்தவரை, அவர்களின் ரெசிடென்ஸி விசாக்களும் பெற்றோரின் விசா ரத்து செய்யப்பட்டவுடன் அவர்களின் விசாவும் ரத்து செய்யப்படும். இருப்பினும், நாட்டில் இன்னும் சில மாதங்களுக்கு சட்டப்பூர்வமாக அவர்களை தங்க வைக்க விருப்பங்கள் உள்ளன. இதனால் அவர்கள் பள்ளி ஆண்டை முடிக்க முடியும்.

ADVERTISEMENT

அதாவது, மனைவி கணவரின் விசாவில் இல்லாத வரை மற்றும் அவரது முதலாளியிடமிருந்து தனி விசாவைப் பெற்றிருக்கும் வரை, குழந்தைகளின் விசாவை ஸ்பான்சர் செய்யலாம். அது சாத்தியமில்லை என்றால், குழந்தைகளின் ரெசிடென்ஸி விசாவை ஹோல்டில் வைத்து, புதிய வேலைவாய்ப்பை தேடி, பின்னர் மீண்டும் உங்கள் குழந்தைகளின் விசாவை ஸ்பான்சர் செய்யலாம். இது பற்றிய கூடுதல் விசாரணைகளுக்கு GDRFA – துபாயைத் தொடர்பு கொள்ளலாம்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel