ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் டெலிமார்க்கெட்டிங் விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்திலையில் அந்த விதிமுறைகளுக்கு இணங்காததற்காக துபாயில் உள்ள 174 நிறுவனங்கள் எச்சரிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 159 நிறுவனங்களுக்கு விதிகளைப் பின்பற்றத் தவறியதற்காக 50,000 திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது.
நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் நியாயமான வர்த்தகத்திற்கான துபாய் கார்ப்பரேஷன் ( Dubai Corporation for Consumer Protection and Fair Trade- DCCPFT) டெலிமார்க்கெட்டிங் நடைமுறைகளை ஒழுங்குபடுத்துவதற்கும், நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் நெறிமுறை வணிக நடைமுறைகளை மேம்படுத்துவதற்கும் வலுவான நடவடிக்கை எடுத்துள்ளது.
அமீரகத்தில் தேவையற்ற டெலிமார்க்கெட்டிங் அழைப்புகளைக் குறைப்பதையும், நுகர்வோரின் தனியுரிமையை பாதுகாப்பாக வைத்திருக்கவும், நுகர்வோர் மற்றும் வணிகங்களுக்கிடையில் நம்பிக்கையை வளர்க்கவும் இந்த விதிகள் அறிமுகம் செய்யப்பட்டன. 2024 ஆம் ஆண்டின் 56 மற்றும் 57 அமைச்சரவை தீர்மானங்களை அமல்படுத்தியதைத் தொடர்ந்து இந்த அபராதங்கள் அமல்படுத்தப்பட்டன.
மேலும், வணிகங்கள் பொருத்தமான சந்தைப்படுத்தல் நேரம் மற்றும் சேனல்களைப் பின்பற்றுவதை உறுதி செய்வதன் மூலம் நுகர்வோர் நம்பிக்கையை உருவாக்கவும் அவை உதவுகின்றன. இந்த விதிகள் தங்களின் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை தொலைபேசி அழைப்புகள் மூலம் விற்பனை செய்யும் அனைத்து உரிமம் பெற்ற நிறுவனங்களுக்கும், இலவச மண்டலங்களில் உள்ள நிறுவனங்களும் பொருந்தும்.
முக்கிய விதிமுறைகளில் ‘அழைக்க வேண்டாம் பதிவேட்டில்’ (Do Not Call Registry- DNCR) பட்டியலிடப்பட்ட எண்களைத் தொடர்பு கொள்ளாமல் இருத்தல், காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை அழைப்புகளை கட்டுப்படுத்துதல் மற்றும் அழைப்பின் தொடக்கத்தில் நுகர்வோருக்கு முன் அறிவித்தல் ஆகியவையும் அடங்கும்.
அதன்படி, அமீரகத்தில் வசிக்கும் குடியிருப்பாளர்களில் தேவையற்ற டெலிமார்க்கெட்டிங் அழைப்புகளைப் பெறும் நுகர்வோர்கள் இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் சென்று பார்வையிடுவதுடன் மூலம் தங்கள் உரிமைகளைப் பாதுகாக்க முடியும்: https://consumerrights.ae/en/pages/default.aspx
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel