ADVERTISEMENT

ரமலானை முன்னிட்டு துபாய் மெட்ரோ, கட்டண பார்க்கிங் மற்றும் சாலிக் நேரங்களை வெளியிட்ட RTA..!!

Published: 27 Feb 2025, 8:08 AM |
Updated: 27 Feb 2025, 8:08 AM |
Posted By: Menaka

ஒவ்வொரு வருடமும் ரமலான் மாதத்தின் போது துபாயில் கட்டண பார்க்கிங் மற்றும் நீட்டிக்கப்பட்ட மெட்ரோ நேரம் அறிவிக்கப்படும். அந்தவகையில், இந்தாண்டு புனித மாதத்திற்கான பார்க்கிங் மற்றும் துபாய் மெட்ரோ நேரம் மற்றும் இலவச சாலிக் ஆகியவற்றின் மாற்றியமைக்கப்பட்ட நேரங்களை துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) புதன்கிழமை அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

RTA வெளியிட்ட அறிவிப்பின் படி, துபாய் மெட்ரோவின் ரெட் லைன் மற்றும் க்ரீன் லைன் வழித்தடங்கள் திங்கள் முதல் வியாழன் வரை மற்றும் சனிக்கிழமைகளில் காலை 5 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை இயங்கும். மேலும், வெள்ளிக்கிழமைகளில் காலை 5 மணி முதல் 1 மணி வரையிலும் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 8 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரையிலும் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்டண பொது பார்க்கிங் நேரங்கள்

திங்கள் முதல் சனிக்கிழமை வரை

ADVERTISEMENT
  • காலை 8 மணி – மாலை 6 மணி
  • இரவு 8 மணி முதல் 12 நள்ளிரவு வரை
  • திங்கள் முதல் சனிக்கிழமை வரை மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழுவதும் பார்க்கிங் இலவசம்
  • மல்டி லெவல் பார்க்கிங் கட்டிடங்கள் 24/7 நேரமும் கட்டணத்தில் இயங்கும்,

சாலிக் கட்டணங்கள்

>> வார நாட்களில் போக்குவரத்து உச்ச நேரங்களான காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 6 திர்ஹம்ஸ் மற்றும் நெரிசல் இல்லாத நேரங்களான காலை 7 மணி முதல் காலை 9 மணி வரை மற்றும் மாலை 5 மணி முதல் மறுநாள் 2 மணி வரை 4 திர்ஹம்ஸ் ஆக இருக்கும்.

>> அதேபோல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை அதிகாலை 2 மணி முதல் காலை 7 மணி வரை கட்டணம் இலவசம். ஞாயிற்றுக்கிழமைகளில், கட்டணம் நாள் முழுவதும் காலை 7 மணி முதல் அதிகாலை 2 மணி வரை 4 திர்ஹம்ஸ் ஆக இருக்கும்; மற்றும் அதிகாலை 2 மணி முதல் காலை 7 மணி வரை இலவசமாக கடக்கலாம்.

ADVERTISEMENT

துபாய் டிராம்

RTA வின் படி, ரமலான் மாதம் முழுவதும் துபாய் டிராம் திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 6 மணி முதல் மறுநாள் அதிகாலை 1 மணி வரையிலும், ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 9 மணி முதல் மறுநாள் அதிகாலை 1 மணி வரையிலும் சேவை செய்யும்.

இவை தவிர, துபாய் பொது பேருந்துகள் மற்றும் கடல் போக்குவரத்து இயக்க நேரங்களின் முழுமையான பட்டியலுக்காக S’hail  பயன்பாடு அல்லது RTAவின் வலைத்தளத்தை சரிபார்க்குமாறு  பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோல், வாடிக்கையாளர் மகிழ்ச்சி மற்றும் சேவை மையங்களுக்கான திருத்தப்பட்ட நேரங்களும் RTA இணையதளத்தில் கிடைக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel