ஐக்கிய அரபு அமீரக சுற்றுலா என்று கூறினாலே அனைவரின் மனதிலும் உடனடியாக தோன்றும் முக்கிய இடங்களில் ஒன்று துபாய் ஃபவுன்டைன் ஆகும். துபாய் மாலில் உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலீஃபாவை பார்க்கும் வண்ணம் இது அமைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் தினசரி இரவு நேரங்களில் பார்வையாளர்களுக்காக பிரத்யேக வாட்டர் டான்ஸ் என்று சொல்லக்கூடிய நீரூற்று நடனம் மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்றாகும். தற்பொழுது டவுன்டவுன் துபாயில் அமைந்துள்ள இந்த துபாய் ஃபவுன்டைன் (Dubai Fountain) 5 மாதங்களுக்கு தற்காலிகமாக மூடப்படும் என்று ப்ராப்பர்டி டெவலப்பரான எமார் ப்ராப்பர்ட்டீஸ் (Emaar properties) அறிவித்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் மிகவும் பிரபலமான சுற்றுலா தலங்களில் ஒன்றான துபாய் ஃபவுன்டைனில் மேம்பட்ட நடன மற்றும் மேம்பட்ட லைட்டிங் மற்றும் ஒலி அமைப்பை அமைக்கவிருப்பதால் இந்த மூடல் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெரிவிக்கையில் இந்த சுற்றுலா இலக்கின் மேம்படுத்தல் மே மாதத்தில் தொடங்குவதால் மே முதல் மூடல் அறிவிக்கப்படும் என்றும், மேம்படுத்தல்கள் அதிவேக நிகழ்ச்சியை உருவாக்கும் என்றும் எமார் நிறுவனம் தெரிவித்துள்ளது.
துபாய் மால் மற்றும் புர்ஜ் கலீஃபாவுக்கு அருகிலுள்ள ஏரியில் அமைந்துள்ள நடன நீரூற்றைப் பார்க்க உலகெங்கிலும் இருந்து மில்லியன் கணக்கான பார்வையாளர்கள் மற்றும் அமீரகக் குடியிருப்பாளர்கள் ஒவ்வொரு ஆண்டும் வருகிறார்கள். இசை மற்றும் ஒளி நிகழ்ச்சிகளுடன் ஒத்திசைந்து நடனமாடும் நீரூற்று பார்வையாளர்களை வசீகரிக்கும். மேலும், நீரூற்று மீண்டும் திறக்கப்பட்டவுடன் இன்னும் கண்கவர் நிகழ்ச்சியாக இருக்கும் என்று நிறுவனம் உறுதியளித்துள்ளது.
இது குறித்து எமார் நிறுவனர் முஹம்மது அலபார் அவர்கள் பேசிய போது, “துபாய் ஃபவுன்டைன் ஒரு ஷோ என்பதை விட, இது துபாயின் முக்கிய பிரதிபலிப்பாகும், அங்கு கலை, புதுமை மற்றும் உணர்ச்சி ஆகியவை சரியான இணக்கத்துடன் ஒன்றாக வருகின்றன. இதை மேம்படுத்தும் போது மக்களை இணைக்கும், அதிசயத்தை ஊக்குவிக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel