ADVERTISEMENT

துபாய்: சட்டவிரோத மசாஜ் கார்டுகளை அச்சிட்ட அச்சகங்களை இழுத்து மூடி ஊழியர்களை கைது செய்த போலீஸ்!!!

Published: 23 Feb 2025, 10:30 AM |
Updated: 23 Feb 2025, 10:40 AM |
Posted By: Menaka

துபாயில் சட்டவிரோத மசாஜ் கார்டுகளை தயாரித்ததற்காக நான்கு அச்சிடும் அச்சகங்களை (printing press) மூடியதாக துபாய் காவல்துறை அறிவித்துள்ளது. அச்சகத்தில் பணிபுரிந்த ஊழியர்களை கைது செய்த அதிகாரிகள், இந்த அச்சகங்களுடன் தொடர்புடைய எவரும் சட்டரீதியான விளைவுகளை எதிர்கொள்ளக்கூடும் என்று எச்சரித்துள்ளனர்.

ADVERTISEMENT

மேலும், இந்த மசாஜ் கார்டுகளில் காட்டப்பட்டிருக்கும் எண்களை தொடர்பு கொள்ள வேண்டாம் என்றும், அவை சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களிடமிருந்து திருட்டு அல்லது மிரட்டி பணம் பறித்தல் போன்ற அபாயங்களுக்கு வழிவகுக்கும் என்றும் காவல்துறை பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது. அதுமட்டுமில்லாமல், பொது புலனாய்வுத் துறை (General Department of Criminal Investigation) சட்டவிரோத மசாஜ் கார்டுகள் குறித்த அறிக்கைகளைப் பெற, 24/7 என முழுநேரமும் இயங்கும் ஒரு சிறப்புக் குழுவை அமைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Dubai Police close 4 presses for printing illegal massage cards

ADVERTISEMENT

இந்த முயற்சி சமூகத்தை பாதுகாப்பாக வைத்திருப்பதற்கும் சட்டவிரோத நடவடிக்கைகளை அகற்றுவதற்கும் துபாய் காவல்துறையின் தற்போதைய உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக வந்துள்ளதாகத் துபாய் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த மசாஜ் அட்டைகள் பெரும்பாலும் உரிமம் பெறாத சேவைகளை விளம்பரப்படுத்துகின்றன மற்றும் பெண்கள் மற்றும் நடிகைகளின் ஆபாச புகைப்படங்களைக் கொண்டுள்ளன.

Dubai Police close 4 presses for printing illegal massage cards

ADVERTISEMENT

சட்டவிரோத மசாஜ் அட்டைகள் அதிகாரிகளால் பல ஆண்டுகளாக பறிமுதல் செய்யப்பட்ட போதிலும், தெருக்களில் மற்றும் நடைபாதைகளில் சில சுற்றுப்புறங்களில் இன்னும் அவை காணப்படுகின்றன. இந்த அட்டைகளைப் பற்றி தங்கள் குழந்தைகளுடன் பெற்றோர்கள் வெளிப்படையாகப் பேச வேண்டும் என்று வலியுறுத்திய நிபுணர்களும் அதிகாரிகளும் , அவற்றை ஏன் எடுக்கக்கூடாது என்பதையும் விளக்கியுள்ளனர்.

துபாய் போலீஸ் அப்ளிகேஷனில் ‘Police Eye’ அம்சத்தைப் பயன்படுத்தி அல்லது கட்டணமில்லா எண் 901 ஐ அழைப்பதன் மூலம், இந்த அட்டைகளை விநியோகிப்பது அல்லது பிரிண்ட் செய்வது போன்ற எந்தவொரு சட்டவிரோத நடவடிக்கைகளையும் புகாரளிக்குமாறு துபாய் காவல்துறை பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த முயற்சி சமூகத்தின் பாதுகாப்பு மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்பதையும் காவல்துறை வலியுறுத்தியுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel