புனித ரமலான் மாதம் தொடங்க ஓரிரு தினங்களே உள்ள நிலையில், அமீரகம் முழுவதும் ரமலான் மாதத்திற்கான ஏற்பாடுகள் வெகுவிமர்சையாக மேற்கொள்ளப்படுகின்றன. ரமலான் இஸ்லாமிய நாட்காட்டியின் ஒன்பதாவது மாதமாகும். மேலும் இது முஸ்லிம்களுக்கு புனிதமான மாதங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. ரமலானின் தொடக்கமும் முடிவும் பிறையைப் பொறுத்து தீர்மானிக்கப்படுகிறது. துபாய் இஸ்லாமிய விவகாரங்கள் மற்றும் தொண்டு நடவடிக்கைகள் துறை (IACAD) படி இந்த வருடம் மார்ச் 1, 2025 சனிக்கிழமையன்று ரமலான் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், துபாய் காவல்துறையானது எமிரேட் முழுவதும் மேற்கொள்ளப்படும் இஃப்தார் கனான் ஃபயரிங் (cannon firing) இருப்பிடங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. ரமலான் மாதத்திற்கான ஏற்பாடுகள் எனும் போது, குடியிருப்பாளர்களால் பரவலாக எதிர்பார்க்கப்படும் நிகழ்வுகளில் பீரங்கி சுடப்படும் இஃப்தார் கனான் ஃபயரிங்கும் ஒன்றாகும். ரமலான் மாதத்தில் நடைபெறும் ஒரு தனித்துவமான மற்றும் வரலாற்று பாரம்பரியமான இந்த நிகழ்வானது, ரமலான் மாதத்தில் ஒரு சிறப்பு சந்தர்ப்பத்தைக் குறிக்கிறது. ரமலான் மாதம் முழுவதும் ஒவ்வொரு நாளும் இஃப்தாரின் போது ஒரு முறை கனான் ஃபயரிங் செய்யப்படும்.
அதாவது, இந்த மாதத்தில், முஸ்லிம்கள் விடியற்காலையில் இருந்து சூரியன் மறையும் வரை நோன்பிருந்து மாலை நோன்பை முடித்து சாப்பிடும் உணவு இஃப்தார் என்று அழைக்கப்படுகிறது. இதில் கனான் ஃபயரிங் இஃப்தாருக்கான நேரத்தை அறிவிப்பதற்கான குறியீட்டு வழிகளில் ஒன்றாகும். அன்றைய நோன்பின் முடிவைக் குறிக்கும் வகையில், மக்ரிப் தொழுகைக்கு அழைப்பு விடுக்கப்படும் அதே நேரத்தில் பீரங்கியின் உரத்த சத்தம் நகரம் முழுவதும் ஒலிக்கும்.
துபாயில் பாரம்பரிய இஃப்தார் பீரங்கிகளைக் (fixed iftar cannon) காணக்கூடிய இடங்கள்:
- எக்ஸ்போ சிட்டி துபாய்
- புர்ஜ் கலீஃபா
- ஃபெஸ்டிவல் சிட்டி
- அப்டவுன்
- மதினத் ஜுமேரியா
- டமாக் ஹில்ஸ்
- ஹத்தா கெஸ்ட் ஹவுஸ்
கூடுதலாக, எமிரேட் முழுவதும் ரோமிங் பீரங்கிகளுக்காக இந்த ஆண்டு மேலும் மூன்று இடங்கள் சேர்க்கப்பட்டதால், மொத்த எண்ணிக்கை 17 இடங்களாக அதிகரித்துள்ளன. இவை ஒவ்வொன்றும் இரண்டு நாட்களுக்கு நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் பின்வரும் இடங்கள் அடங்கும்:
- மேதான் ஹோட்டல்
- சத்வா மசூதி
- அல் மார்மூம்
- ஜபீல் பார்க்
- அல் கவானீஜ் மஜ்லிஸ்
- ஃபெஸ்டிவல் சிட்டி
- அல் வாஸ்ல் பார்க் 1
- மதினாத் ஜுமேரா
- பார்ஷா பார்க்
- லஹ்பாப்
- நாத் அல் ஷெபா 1 – அல் காஃப்
- அப்டவுன் மீர்டிஃப்
- மார்காம்
- நாஸ்வா
- நாத் ஷம்மா பார்க்
- புர்ஜ் கலீஃபா
- கைட் பீச் ஜுமேரா
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel