ADVERTISEMENT

துபாய்: ஸ்மார்ட் கேமராக்களில் பிடிபடாமல் இருக்க வாகனத்தின் நம்பர் பிளேட்களை மாற்றியமைத்த உரிமையாளர்கள்!! 23 வாகனங்களை பறிமுதல் செய்த துபாய் போலீஸ்…

Published: 14 Feb 2025, 5:26 PM |
Updated: 14 Feb 2025, 5:29 PM |
Posted By: Menaka

2024 ஆம் ஆண்டில், துபாயின் சாலைகளில் பொருத்தப்பட்டுள்ள ஸ்மார்ட் கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் போக்குவரத்து அமைப்புகளில் பிடிபடாமல் இருப்பதற்காக வேண்டுமென்றே தங்கள் வாகனத்தின் எண் தகடுகளை (number plates) மாற்றியமைத்த வாகன உரிமையாளர்களின் 23 வாகனங்களை பறிமுதல் செய்து துபாய் காவல்துறை நடவடிக்கை எடுத்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பகிரப்பட்ட ஒரு அறிக்கையில், குற்றவாளிகள் போக்குவரத்து விதிமுறைகளை தெளிவாக மீறுவதில் சிக்கிய பின்னர் அந்த வாகனங்களை அதிகாரிகள் கைப்பற்றியதாக உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், துபாய் காவல்துறையால் பகிரப்பட்ட வீடியோவில், காரின் லைசென்ஸ் பிளேட்டில் ஸ்ப்ரே பெயின்ட் கேன்களைப் பயன்படுத்துவதையும், காண முடிகிறது.

மேலும், இதுபோன்ற மீறல்களுக்கு கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று துபாய் காவல்துறை எச்சரிக்கை விடுத்தது. எனவே, இவ்வாறு வாகன உரிமத் தகடுகளை சேதப்படுத்துபவர்களின் வாகனம் பறிமுதல் செய்யப்படும் எனவும், 2023 ஆம் ஆண்டின் 30 வது ஆணையின்படி, பறிமுதல் செய்யப்பட்ட வாகனத்தை விடுவிப்பதற்கான 50,000 திர்ஹம் அபராதம் செலுத்த வேண்டும் எனவும் காவல்துறை உரிமையாளர்களை எச்சரித்துள்ளது.

ADVERTISEMENT


இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel