ADVERTISEMENT

கட்ந்த ஆண்டு DXBல் பயணிகள் தொலைத்த 26 மில்லியன் திர்ஹம்ஸ் மதிப்பிலான பொருட்கள்.!! மீண்டும் பயணிகளிடம் ஒப்படைத்த துபாய் போலீஸ்..!!

Published: 25 Feb 2025, 12:25 PM |
Updated: 25 Feb 2025, 12:25 PM |
Posted By: Menaka

2024 ஆம் ஆண்டில், துபாய் காவல்துறையில் உள்ள விமான நிலைய பாதுகாப்பின் பொதுத் துறையின் (General Department of Airport Security) ‘lost and found’ அமைப்பு சுமார் 26 மில்லியன் திர்ஹம்ஸ் மதிப்புள்ள தொலைந்த பொருட்களை அவற்றின் சரியான உரிமையாளர்களுக்கு திருப்பித் தர உதவியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இது குறித்து விமான நிலைய பாதுகாப்பின் பொதுத் துறையின் இயக்குனர் பிரிகேடியர் ஹமூடா பல்சுவைதா அல் அமேரி (Hamouda Balsuwaida Al Ameri) அவர்கள் பேசுகையில், இழந்த அனைத்து பொருட்களையும் விரைவாகக் கண்காணிப்பதிலும், நடைமுறைகளை பின்பற்றுவதிலும் துபாய் காவல்துறை முக்கிய பங்காற்றியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு காணாமல் போன பொருட்களைப் புகாரளித்தவர்களுடனான காவல்துறை அதிகாரிகளின் திறமையான தொடர்பு மற்றும் அவர்களின் உடமைகளை விரைவாக திரும்பப் பெறுவதை உறுதி செய்தல், துபாயை பாதுகாப்பான மற்றும் மகிழ்ச்சியான இடமாக மாற்றுவதற்கான துபாய் காவல்துறையின் உறுதிப்பாட்டைக் காட்டுவதாக குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT

மேலும் துபாய் காவல்துறையின் இந்த முயற்சிகள் பயணிகளிடையே நம்பிக்கையை வளர்ப்பதற்கும், குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் இருவரையும் மிகவும் பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் உணர வைப்பதற்கு உதவுகின்றன என்றும் பிரிகேடியர் அல் அமேரி தெரிவித்துள்ளார்.

2024 ஆம் ஆண்டில், துபாய் விமான நிலையம் ஏறத்தாழ 92 மில்லியனுக்கும் அதிகமான பயணிகள் போக்குவரத்தைக் கண்டது, இதில் வருகை மற்றும் புறப்படும் பயணிகள் இரண்டும் அடங்கும். இவற்றில் பல பயணிகள் மதிப்புமிக்க உடைமைகள் மற்றும் பணம் உள்ளிட்ட தனிப்பட்ட பொருட்களை இழந்ததாக பல வழக்குகள் பதிவாகியுள்ளன.

ADVERTISEMENT

இவ்வாறு இழந்த மற்றும் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களை நிர்வகிக்கும் முறையானது, அனைத்து பயணிகளின் பாதுகாப்பையும் உறுதி செய்வதில் துபாய் காவல்துறையின் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது என்பதை அல் அமேரி எடுத்துரைத்துள்ளார். கூடுதலாக, துபாய் காவல்துறை சகிப்புத்தன்மை மற்றும் சமூக பொறுப்பு போன்ற மனித மதிப்புகளை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதுமட்டுமல்லாமல், விமான நிலையத்தில் பயணிகள் தொலைத்த பொருட்களை மீண்டும் அவர்களிடமே திருப்பித் தருவதையும் தாண்டி, காவல்துறையின் இந்த நடவடிக்கைகள் துபாயின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பிற்கான சர்வதேச நற்பெயரை உலகளவில் பராமரிக்க உதவுகின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel