துபாயில் டாக்ஸி சேவைகளை இயக்கும் துபாய் டாக்ஸி கார்ப்பரேஷன் (DTC) அதன் செயல்பாடுகளை துபாய்க்கு அப்பாலும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தற்போது இந்த நிறுவனம் டாக்ஸிகள் மற்றும் லிமோசைன்களை எமிரேட்டில் பிரத்தியேகமாக இயக்கி வருகின்றது.
இந்நிலையில் செவ்வாயன்று, துபாயில் நடந்த உலக அரசாங்க உச்சிமாநாட்டின் (World Governments Summit) போது விரிவாக்கத் திட்டங்கள் குறித்து பேசிய நிறுவனத்தின் CEO மன்சூர் ரஹ்மா அல்ஃபாலாசி, சேவையை பிற எமிரேட்ஸ்க்கு எவ்வாறு விரிவுபடுத்த முடியும் என்பதை ஆராய்ந்து வருவதாகத் தெரிவித்துள்ளார். 1994 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட துபாய் டாக்ஸி கார்ப்பரேஷன் (DTC), தற்போது 6000 டாக்ஸிகள் உட்பட 9,000 க்கும் மேற்பட்ட வாகனங்களை இயக்குகிறது மற்றும் டாக்ஸிகள், VIP லிமோசைன்கள், பேருந்துகள் மற்றும் விநியோக சேவைகள் போன்ற நான்கு முதன்மை வணிகங்களில் 17,500 ஓட்டுனர்களைக் கொண்டுள்ளது.
DTC ஏற்கனவே கடந்த ஆண்டு இறுதியில், உலகளாவிய இ-ஹைலிங் தளமான Bolt உடனான கூட்டாண்மை மூலம் தனது சேவைகளை விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ஆரம்பத்தில், இந்த கூட்டாண்மை லிமோசின் சேவைகளை வழங்குவதில் கவனம் செலுத்தியது. இருப்பினும், இந்த ஆண்டின் முதல் காலாண்டில் போல்ட் பிளாட்ஃபார்மில் வழக்கமான டாக்ஸி சேவைகளை அறிமுகப்படுத்தலாம் என்று அல்ஃபாலாசி முன்னதாக தெரிவித்திருந்தார்.
மேலும், 50 க்கும் மேற்பட்ட நாடுகளில் 600 க்கும் மேற்பட்ட நகரங்களில் 200 மில்லியனுக்கும் அதிகமான செயலில் உள்ள பயனர்களைக் கொண்ட உலகின் மிகப்பெரிய இ-ஹெயிலிங் அப்ளிகேஷனாக போல்ட் கருதப்படுவதாகக் குறிப்பிட்ட அல்ஃபாலாசி, “போல்ட் ஆனது அமீரகம் மற்றும் பிராந்தியத்திற்கு அப்பால் விரிவுபடுத்த விரும்பி, நாங்கள் ஒரு கூட்டாளராக இருக்க விரும்பினால், நாங்கள் அதற்குத் தயாராக இருக்கிறோம்” என்றும் தெரிவித்துள்ளார்.
விரிவாக்கம் என்பது இ-ஸ்கூட்டர் மற்றும் இ-பைக் ரெண்டல்ஸ், உணவு மற்றும் மளிகைப் பொருட்கள் விநியோகம் மற்றும் குறுகிய கால கார் வாடகை போன்ற மைக்ரோ-மொபிலிட்டி தீர்வுகள் உட்பட பிற வணிக தீர்வுகளை வழங்குவதை உள்ளடக்கும் என்றும், மற்ற எமிரேட்டுகளில் டாக்ஸி செயல்பாடுகளை விரிவுபடுத்தும் போது, அதை பொதுமக்களுக்கு வெளிப்படுத்துவோம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கிடையில், 2026 ஆம் ஆண்டில் துபாயின் சாலைகளில் செல்ப்-டிரைவிங் டாக்சிகள் இயங்குவதற்கான பாதையில் துபாய் உள்ளது என்றும் அல்ஃபாலாசி கூறினார். DTC ஏற்கனவே அபு துபாயில் டெலிவரி பைக்குகளை இயக்குவதில் தலாபத் உடனான கூட்டாண்மை மூலம் முன்னிலையில் உள்ளது மற்றும் ராஸ் அல் கைமா மற்றும் அஜ்மானில் பள்ளி பேருந்துகளையும் DTC இயக்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel