ADVERTISEMENT

பிஸியாகும் துபாய் ஏர்போர்ட்.. ஒரே வாரத்தில் பயணிக்கும் 2.5 மில்லியன் பயணிகள்..

Published: 20 Feb 2025, 7:13 PM |
Updated: 20 Feb 2025, 7:13 PM |
Posted By: Menaka

இந்த வார இறுதியில் துபாய் சர்வதேச விமான நிலையமானது அதிகளவு பயணிகளை கையாளும் என்று கூறப்பட்டுள்ளதால் இந்த வார இறுதி வரை துபாய் இன்டர்நேஷனலில் (DXB) பயணிகள் பிஸியான நேரங்களுக்கு தயாராக வேண்டும் அறிவுறுத்தப்படுகிறார்கள். குறிப்பாக, பிப்ரவரி 20 முதல் 28 வரை 2.5 மில்லியனுக்கும் அதிகமான பயணிகள் துபாய் சர்வதேச விமான நிலையத்தை பயன்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

இந்த நாட்களில் ஒரு நாளைக்கு சராசரியாக 280,000 பயணிகள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் பிப்ரவரி 22 சனிக்கிழமை, சுமார் 295,000 க்கும் மேற்பட்டவர்களுடன் மிகவும் பரபரப்பான நாளாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. துபாயில் நடைபெறும் ICC சாம்பியன்ஸ் டிராஃபி போன்ற உலகளாவிய நிகழ்வுகள் மற்றும் பள்ளி விடுமுறை நாட்கள் போன்றவையே பயணத்தின் இந்த எழுச்சிக்கு காரணமாகும் என்று DXB தெரிவித்துள்ளது.

இந்த உச்ச காலத்தில் துபாய் மெட்ரோவில் விமான நிலையத்திற்குச் செல்லவும், குறிப்பாக டெர்மினல்கள் 1 மற்றும் 3 க்கு இடையில் செல்லவும் பயணிகளுக்கு DXB அறிவுறுத்தியுள்ளது. மேலும் விமான நிலையத்திற்கு முன்கூட்டியே சென்றடையுமாறும் பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

கூடுதலாக, பிப்ரவரி 21 முதல், டெர்மினல் 1 இல் அரைவல் பஸ் நிறுத்தம் சேவை வெளியே இருக்கும் என்றும், சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் (RTA) இணையதளத்தில் மாற்று போக்குவரத்து விருப்பங்கள் மற்றும் புதுப்பிக்கப்பட்ட பஸ் அட்டவணைகளைக் காணலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

ADVERTISEMENT