துபாயில் நடைபெற்று வரும் ‘UAE Tour cycling’ பந்தயம் காரணமாக துபாயின் சில குறிப்பிட்ட சாலைகள் இன்று (பிப்ரவரி 21, வெள்ளிக்கிழமை) தற்காலிகமாக மூடப்படும் என்று சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) அறிவித்துள்ளது. இது குறித்து X தளத்தில் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில், துபாயில் போட்டி மதியம் 12:30 மணி முதல் மாலை 4:30 மணி வரை நடைபெறும், இந்த நேரத்தில், போக்குவரத்து மேலாண்மை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக சில சாலைகள் 10 முதல் 15 நிமிடங்கள் மூடப்படும் என்று தெரிவித்துள்ளது.
எனவே, வாகன ஓட்டிகள் தங்கள் பயணங்களை முன்கூட்டியே திட்டமிடவும், தங்கள் இலக்கை சரியான நேரத்தில் அடைய முன்னர் வெளியேறவும் அதிகாரம் கேட்டுக்கொண்டுள்ளது. பங்கேற்பாளர்கள் துபாயில் உள்ள அமெரிக்க பல்கலைக்கழகத்தில் தொடங்கி ஹம்தான் பின் முகமது ஸ்மார்ட் பல்கலைக்கழகத்தில் முடிப்பதற்கு முன்பு ஷேக் சையத் சாலை, அல் நசீம் ஸ்ட்ரீட், அல் கைல் சாலை, அல் ஜமாயல் ஸ்ட்ரீட், மற்றும் ஷேக் சையத் பின் ஹம்தான் அல் நஹ்யான் ஸ்ட்ரீட் உள்ளிட்ட முக்கிய சாலைகள் வழியாக மொத்தம் 160 கி.மீ. ஓட்டிச் செல்வார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
துபாயில் பிப்ரவரி 17 திங்கள் அன்று தொடங்கிய இந்த போட்டி UAE டூரின் ஐந்தாவது நிலை ஆகும், இந்த ஆண்டு அபுதாபி ஸ்போர்ட்ஸ் கவுன்சிலால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வின் பதிப்பில் மொத்தம் 140 பங்கேற்பாளர்கள் பங்கேற்றதாகக் கூறப்படுகிறது.
பாதிக்கப்படும் சாலைகள்:
- ஷேக் சையத் சாலை
- அல் நசீம் ஸ்ட்ரீட்
- ஃபர்ஸ்ட் அல் கைல் ஸ்ட்ரீட்
- அல் ஜாமாயல் ஸ்ட்ரீட்
- அல் அசாயல் ஸ்ட்ரீட்
- அல் கமிலா ஸ்ட்ரீட்
- அல் கைல் ஸ்ட்ரீட்
- அல் ஃபே ஸ்ட்ரீட்
- ஹெஸ்ஸா ஸ்ட்ரீட்
- ஷேக் சையத் பின் ஹம்தான் அல் நஹ்யான் ஸ்ட்ரீட்
- அல் கட்ரா சாலை
- சாய் அல் சலாம் ஸ்ட்ரீட்
- திரிப்போலி ஸ்ட்ரீட்
- ரெபாத் ஸ்ட்ரீட்
- நாத் அல் ஹமர் சாலை
- ராஸ் அல் கோர் சாலை
- அல் மேதான் சாலை
- துபாய்-அல் அய்ன் சாலை
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel