ADVERTISEMENT

UAE வேலைகள்: கல்வித்தகுதிகளை விட திறமைக்கும் அனுபவத்திற்குமே முன்னுரிமை!! HR நிபுணர்கள் கூறுவது என்ன??

Published: 6 Feb 2025, 11:23 AM |
Updated: 6 Feb 2025, 11:30 AM |
Posted By: Menaka

2025 ஆம் ஆண்டில் ஐக்கிய அரபு அமீரகத்தின் வேலைச் சந்தையானது நாட்டின் பல்வகைப்படுத்தல் முயற்சிகள், தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மற்றும் நிலைத்தன்மைக்கான தொடர்ச்சியான உந்துதல் உள்ளிட்ட காரணிகளின் கலவையால் தொடர்ந்து மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

இந்நிலையில், அமீரகத்தில் உள்ள முதலாளிகள் ஆட்சேர்ப்பு செயல்முறையின் போது, வேலைக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் தகுதிகளை விட அவர்களின் திறன் மற்றும் அனுபவம் ஆகியவற்றுக்கே முன்னுரிமை அளித்து பணியமர்த்துவதாக HR நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

UAE இல் உள்ள HR நிபுணர்களின் கூற்றுப்படி, இது ‘Workforce Trends and Market Insights’ என்ற தலைப்பில், Innovations Group வெளியிட்ட புதிய அறிக்கையுடன் ஒத்துப் போகிறது. இது பட்டங்கள் அல்லது தொழில் போன்ற தகுதிகளை விட விண்ணப்பதாரர்களின் திறமை மற்றும் திறன்களுக்கு முதலாளிகள் முன்னுரிமை அளிப்பதை எடுத்துக்காட்டுகிறது. இந்த ஆட்சேர்ப்பு செயல்முறையானது, புதுமை மற்றும் பணி கலாச்சாரத்தை வளர்க்கும் அதே வேளையில், நிறுவனங்களுக்கு மிகவும் பரந்த மற்றும் பலதரப்பட்ட திறமைக் குழுவைச் சேர்க்க உதவுவதாக HR நிபுணர்கள் கூறுகின்றனர்.

ADVERTISEMENT

திறமைக்கு முன்னுரிமை

ஆட்சேர்ப்பு ஆலோசகர்களின் கூற்றுப்படி,  சுமார் 70 சதவீதம் பணியமர்த்தல் மேலாளர்கள் இப்போது திறமையின் அடிப்படையில் மட்டுமே பணியமர்த்துகிறார்கள், அவர்களில் பெரும்பாலானோர் கல்வி தகுதியைப் பார்ப்பதில்லை.

மேலும், அனேகமாக 15  சதவீதத்தினரே அவ்வாறு செய்கிறார்கள் என்றும், பலர் இப்போது அனுபவம் மற்றும் அணுகுமுறையின் அடிப்படையில் பணியமர்த்தப்படுவதையே விரும்புவதாகவும், முன்னெப்போதையும் விட அதிகமான பணியமர்த்தல் அதிகாரிகள் சமீபத்திய பட்டதாரிகளை முழுமையாக வேண்டாம் என்று கூறுவதாகவும் ஆட்சேர்ப்பு ஆலோசகர்கள் குறிப்பிடுகின்றனர்.

ADVERTISEMENT

அதேசமயம், ஒரு முதலாளி ஒரு விண்ணப்பத்தை மதிப்பாய்வு செய்யும் போது, ​​அனுபவத்திற்கு முன்னுரிமை கொடுப்பதாகவும் கூறப்படுகிறது. இருந்தபோதிலும், பல வேலை வாய்ப்புகளுக்கு, குறிப்பாக நுழைவு நிலை அல்லது ஆரம்பகால வேலை பாத்திரங்களுக்கான நேர்காணலில் பங்கேற்பதற்கு அது தொடர்புடைய கல்விப்பிரிவு முக்கியமானதாகும் என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

திறன்களை மேம்படுத்துதல்

இதற்கிடையில், தொழில்நுட்பம் தொடர்பான பணியமர்த்தலின் போது, சைபர் பாதுகாப்பு மற்றும் AI போன்ற சில துறைகளில், கல்வி பட்டங்களை விட நடைமுறை அனுபவம் மற்றும் பயிற்சி சான்றிதழ்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவதையும் ஆட்சேர்ப்பு ஆலோசகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்

பெரும்பாலும் மார்க்கெட்டிங் மற்றும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பிரிவில் உள்ள முதலாளிகள் என்ன படித்திருக்கிறார்கள் என்பதை விட வலுவான போர்ட்ஃபோலியோவைப் பற்றி அதிகம் அக்கறை காட்டுவதாகக் கூறப்படுகிறது. அதற்கேற்ப இந்த விண்ணப்பதாரர்கள் தங்களின் பட்டப்படிப்பிற்கும் மேலதிகமாக வேலை தொடர்பான பூட்கேம்ப்கள், சான்றிதழ்கள் மற்றும் செயல் திட்டங்கள் மூலம் தங்கள் திறன்களை மேம்படுத்திக் கொள்கிறார்கள்.

மாறிவரும் சந்தை போக்குகளுக்கு ஏற்ப நிறுவனங்கள் மாற வேண்டும்

ஐக்கிய அரபு அமீரகத்தில் சுமார் 45 சதவீத நிறுவனங்கள் ஏற்கனவே திறன் அடிப்படையிலான பணியமர்த்தலை நோக்கி நகர்வதகாவும், இந்த மாற்றம் திறமைக் குழுவை விரிவுபடுத்துவதுடன், வணிகங்களுக்கு சரியான நபர்களைக் கண்டுபிடிக்க உதவுவதகாவும் ஆட்சேர்ப்பு ஆலோசகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும், இதைத் தழுவும் நிறுவனங்கள் அதிக செயல்திறன் கொண்ட வலுவான, மிகவும் தழுவிக்கொள்ளக்கூடிய அணிகளை உருவாக்கப் போகின்றன என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இதனடிப்படையில், சரியான திறமைகளை நியமிக்கவும் தக்கவைக்கவும், அவர்களின் நிபுணத்துவத்தை மேம்படுத்தவும், ஆட்சேர்ப்பு சவால்களை திறம்பட கடக்கவும் நிறுவனங்கள் இளைய தொழிலாளர்களின் மாறிவரும் சந்தை போக்குகள் மற்றும் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றதாக இருக்க வேண்டும் என்றும் தொழில் வல்லுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel