துபாயின் பிரபலமான பன்முகக் கலாச்சார இலக்கான குளோபல் வில்லேஜ் வரவிருக்கும் புனித ரமலான் மாதத்திற்கான நீட்டிக்கப்பட்ட இயக்க நேரங்களை அறிவித்துள்ளது. பொழுதுபோக்கு மற்றும் ஷாப்பிங்கிற்கான புகழ்பெற்ற இந்த இடம், ரமலானின் போது, ஞாயிற்றுக்கிழமை முதல் புதன்கிழமை வரை மாலை 5 மணி முதல் அதிகாலை 1 மணி வரையிலும், வியாழக்கிழமை முதல் சனிக்கிழமை வரை மாலை 5 மணி முதல் 2 மணி வரையிலும் செயல்படும் என்று நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேலும், ரமலான் மாதத்தைக் குறிக்கும் வகையில், பூங்கா முழுவதும் பிரம்மிக்க வைக்கும் ரமலான்-கருப்பொருள் கொண்ட அலங்காரங்களால் அலங்கரிக்கப்பட்டு, ரமலானிற்கான சிறந்த இடமாக மாற்றும் என்றும் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல், ஒரு சிறப்பு ரமலான் பீரங்கி மெயின் ஸ்டேஜுக்கு அருகில் இருக்கும் என்றும், தினமும் நோன்பு முடிவைக் குறிக்கும் வகையில் இஃப்தாரின் போது கனான் ஃபயரிங் (cannon firing) நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு சிறப்பம்சங்களில் ஒன்று, ரமலான் மாதத்தில் குடும்பங்களையும் நண்பர்களையும் ஒன்றிணைக்க வடிவமைக்கப்பட்ட ஒரு பிரத்யேக பகுதியாகும், முல்தக்கா குளோபல் வில்லேஜ் (multaqa global village) என்றழைக்கப்படும் இந்த கான்செப்ட் பூங்காவின் நடப்பு சீசனான 29 வது சீசனில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கூடுதலாக, ஆல் ஆர்னினா ஆர்ட்ஸ் (Ornina Arts Events) இசை நிகழ்ச்சி, ‘தி சீக்ரெட் ஆஃப் தி லாண்டர்ன்’ (The secret of the Lantern’ என்று அழைக்கப்படும் ஒரு பொம்மை நிகழ்ச்சி, ரமலான் ஸ்டெப் சேலஞ்ச் போன்ற பல்வேறு நிகழ்சிகள் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகின்றது. ரமலான் ஸ்டெப் சேலஞ்ச் என்பது பூங்காவிற்கு செல்லும் பார்வையாளர்கள் ஒரு வருகையில் 10,000 படிகளை நடந்து முடித்தால் அற்புதமான பரிசுகள் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel