ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமீறல் புரியும் போது அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். இந்த அபராதத்தை அவர்கள் பல்வேறு தளங்களில் எளிதில் செலுத்தலாம். அதே போல் மற்றவர்களின் போக்குவரத்து அபராதத்தை செலுத்த விரும்பினாலும் அந்த அபராதத்தை செலுத்த விருப்பம் உள்ளது. எனவே, உங்கள் நண்பர் அல்லது குடும்ப உறுப்பினருக்கு உதவி புரிய வேண்டுமானால் நீங்கள் தாராளமாக அவர்களின் போக்குவரத்து அபராதத்தை செலுத்தலாம். இந்த செயல்முறையை ஆன்லைனில் எப்படி செய்வது என்பது பற்றி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
அமீரகத்தின் அதிகாரப்பூர்வ டிஜிட்டல் தளங்கள் மூலம் மற்றொரு நபரின் ஓட்டுநர் உரிமம் அல்லது வாகன நம்பர் பிளேட்டின் கீழ் பதிவுசெய்யப்பட்ட போக்குவரத்து அபராதங்களை செலுத்த காவல்துறை மற்றும் போக்குவரத்து அதிகாரிகள் தனிநபர்களை அனுமதிக்கின்றனர். இதனடிப்படையில், நீங்கள் வேறொருவருக்கு அபராதம் செலுத்த விரும்பினால், துபாய் அல்லது அபுதாபியில் விதிமீறல் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதைப் பொறுத்து செயல்முறை சற்று மாறுபடும்.
துபாயில் மற்றவர்களுக்கு போக்குவரத்து அபராதம் செலுத்துதல்
துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) அதன் ‘RTA Dubai’ ஆப்ஸ் மூலம் அபராதத்தை தீர்க்க தடையற்ற வழியை வழங்குகிறது. பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றி பணம் செலுத்தலாம்:
- உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்துள்ள ‘RTA Dubai’ ஸ்மார்ட் ஆப்ஸைத் திறந்து உங்கள் UAE PASS-ஐ பயன்படுத்தி உள்நுழையவும்.
- அதில் ‘Services’ பிரிவுக்குச் சென்று ‘Fines’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- இப்போது, ‘Pay fines for others’ என்பதைத் தேர்வு செய்யவும். இந்த விருப்பம் மற்றொரு நபருக்கு விதிக்கப்பட்ட மீறல்களைத் தேட உங்களை அனுமதிக்கிறது.
- அதைத் தொடர்ந்து, வாகன எண், ஓட்டுநர் உரிம எண் அல்லது போக்குவரத்து கோப்பு எண் (file number) போன்ற தொடர்புடைய விவரங்களை உள்ளிட்டு நீங்கள் செலுத்த விரும்பும் அபராதத்தை தேடலாம்.
- அடுத்தபடியாக, நீங்கள் செலுத்த விரும்பும் குறிப்பிட்ட அபராதத்தைத் தேர்ந்தெடுத்து உங்களின் கிரெடிட் அல்லது டெபிட் கார்டைப் பயன்படுத்தி பரிவர்த்தனையை முடிக்கவும்.
- கட்டணம் செயலாக்கப்பட்டதும், அப்ளிகேஷனிற்குள் மின்னணு உறுதிப்படுத்தலைப் பெறுவீர்கள்.
அபுதாபியில் மற்றவர்களுக்கு போக்குவரத்து அபராதம் செலுத்துதல்
அபுதாபியில் சாலை விதிமீறலுக்காக விதிக்கப்பட்ட அபராதத்தை செலுத்த வாகன ஓட்டிகள் TAMM அப்ளிகேஷனை பயன்படுத்தலாம், இது அபுதாபி அரசாங்க சேவைகளுக்கான அதிகாரப்பூர்வ போர்ட்டலாக செயல்படுகிறது. வேறொருவரின் சார்பாக அபராதம் செலுத்துவதற்கு பின்வரும் படிகளைப் பின்பற்றவும்:
- உங்கள் மொபைலில் பதிவிறக்கப்பட்டுள்ள TAMM அப்ளிகேஷனை திறந்து, உங்கள் UAE PASS-உடன் உள்நுழையவும்.
- இப்போது தேடல் பட்டியைப் பயன்படுத்தி ‘Traffic fines payment’ என்ற முதல் விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
- பிறகு, ‘Pay for others’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இந்த விருப்பம் உங்கள் முழு பெயர் மற்றும் போக்குவரத்து சுயவிவர எண்ணின் கீழ் கிடைக்கும்.
- அதைத் தொடர்ந்து, எமிரேட்ஸ் ஐடி, ஓட்டுநர் உரிம எண், வாகன எண் அல்லது போக்குவரத்து குறியீடு (T.C.N) எண் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தி அபராதத்தைத் தேடவும்.
- இப்போது, வழங்கப்பட்ட விவரங்களுடன் இணைக்கப்பட்ட அனைத்து நிலுவையில் உள்ள அனைத்து அபராதங்களையும் கணினி காண்பிக்கும்.
- பரிவர்த்தனையை இறுதி செய்ய கிரெடிட் அல்லது டெபிட் கார்டைப் பயன்படுத்தவும்.
- இறுதியில், கட்டணம் வெற்றிகரமாக செயலாக்கப்பட்டதும், நீங்கள் அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலைப் பெறுவீர்கள்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel