ADVERTISEMENT

UAE ரெசிடென்ஸி பெர்மிட் பெறுவதற்கான நெறிப்படுத்தப்பட்ட செயல்முறை என்ன..?? ICP விளக்கம்….

Published: 18 Feb 2025, 8:52 PM |
Updated: 18 Feb 2025, 8:52 PM |
Posted By: Menaka

டிஜிட்டல் சேவைகள் மற்றும் ஆட்டோமேஷனை மேம்படுத்துவதில் ஐக்கிய அரபு அமீரகத்தின் அர்ப்பணிப்பை வலுப்படுத்தும் வகையில், ரெசிடென்ஸி பெர்மிட்டை பெறுதல், புதுப்பித்தல் மற்றும் மாற்றியமைத்தல் ஆகியவற்றுக்கான நெறிப்படுத்தப்பட்ட செயல்முறை மற்றும் வழிமுறைகளை அடையாளம், குடியுரிமை, சுங்கம் மற்றும் துறைமுகப் பாதுகாப்புக்கான கூட்டாட்சி ஆணையம் (ICP) தெளிவுபடுத்தியுள்ளது.

ADVERTISEMENT

இது குறித்து சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ள விபரங்களில், விண்ணப்பதாரர்கள் UAE PASS-ஐ பயன்படுத்தி அதிகாரப்பூர்வ வலைத்தளம் அல்லது ஸ்மார்ட் செயலியில் தங்கள் அக்கவுண்ட்டில் உள்நுழைந்து ரெசிடென்ஸி பெர்மிட் பெறுதல், புதுப்பித்தல் அல்லது மாற்றத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று விவரித்துள்ளது.

ICP வெளியிட்டுள்ள விபரங்களின் படி, விண்ணப்பதாரர்கள் தங்கள் தனிப்பட்ட விவரங்களை மதிப்பாய்வு செய்து, தேவைப்பட்டால், தங்கள் தனிப்பட்ட விவரங்களைப் புதுப்பித்து, தேவையான கட்டணங்களை செலுத்த வேண்டும். விண்ணப்பம் வெற்றிகரமாக செயலாக்கப்பட்டதும், வழங்கப்பட்ட ரெசிடென்ஸி பெர்மிட்டின் உறுதிப்படுத்தல் செய்தியானது விண்ணப்பத்தில் பதிவுசெய்யப்பட்ட ஈமெயிலுக்கு அனுப்பப்படும். இறுதியாக, அங்கீகரிக்கப்பட்ட கூரியர் நிறுவனங்கள் வழியாக எமிரேட்ஸ் ஐடி வழங்கப்படும் என்றும் ICP தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

இந்த சேவை ICP ஆல் வழங்கப்படும் புதிய ரெசிடென்ஸி பெர்மிட்டை பெற அனுமதிக்கிறது. புதிய ரெசிடென்ஸி பெர்மிட்டை பெறுவதற்கு, விண்ணப்பங்களை பின்வரும் வழிகள் மூலம் சமர்ப்பிக்கலாம்:

• வாடிக்கையாளர் மகிழ்ச்சி மையங்கள்: அதிகாரப்பூர்வ வேலை நேரங்களில் சென்று சமர்ப்பிக்கலாம்.
• ஸ்மார்ட் சர்வீசஸ் சிஸ்டம் (வலைத்தளம் & ஸ்மார்ட் ஆப்): UAE PASS-ஐ பயன்படுத்தி விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.

ADVERTISEMENT

மேற்கூறியவாறு, விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட சேவை சேனல் மூலம் தங்கள் கோரிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும் மற்றும் பின்வரும் அனைத்து செயல்முறைகளும் முடிக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும்:

  • தேவைப்படும்போது விண்ணப்பத் தரவை மதிப்பாய்வு செய்து புதுப்பிக்கவும் (reviewing and updating retrieved data).
  • தரவு மீட்டெடுப்பிற்கான ஒருங்கிணைப்பு (data retrieval via integration) கிடைக்கவில்லை என்றால் தேவையான ஆவணங்களை இணைக்கவும்.
  • தேவையான கட்டணங்களைச் செலுத்தவும்.
  • விண்ணப்ப நிலையைக் கண்காணிக்கவும் (tracking application status).
  • விண்ணப்பம் சமர்ப்பித்ததிலிருந்து அதிகபட்சமாக 48 மணி நேரத்திற்குள் இறுதி முடிவைப் பெற எதிர்பார்க்கலாம்.

தேவையான ஆவணங்கள்

பாஸ்போர்ட், தனிப்பட்ட புகைப்படம், கூடுதல் ஆவணங்கள் (தேவைப்பட்டால்) மற்றும் ரெசிடென்ஸி பெர்மிட் வழங்குவதற்கான காரணத்தைப் பொறுத்து, ஸ்பான்சர் செய்யும் நபரின் ஆதாரம் போன்ற பிற ஆவணங்கள் தேவைப்படலாம். இந்த எளிமைப்படுத்தப்பட்ட அணுகுமுறை, ஐக்கிய அரபு அமீரகத்தின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு இணங்கும் அதே வேளையில், குடியிருப்பாளர்கள் தங்கள் ரெசிடென்ஸி பெர்மிட்களை நிர்வகிக்க மிகவும் திறமையான வழியை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel