துபாயில் சமீபத்தில் அமல்படுத்தப்பட்ட ஸ்மார்ட் வாடகை குறியீட்டின் கீழ் சொத்து வாடகை அதிகரிப்புக்கு தகுதி பெற்றாலும், சொத்து உரிமையாளர்கள், குத்தகைதாரர் ஒப்பந்தங்கள் காலாவதியாகுவதற்கு 90 நாள் முன்பாக முன் அறிவிப்பு காலத்தை வழங்க வேண்டும் என்று துபாய் நிலைத்துறை (DLD) தெளிவுபடுத்தியுள்ளது.
இது குறித்து DLD கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், ஒரு வீட்டு உரிமையாளர் தேவையான 90 நாள் அறிவிப்பை அளித்து, புதுப்பித்தல் தேதி இரண்டு காரணிகளால் தீர்மானிக்கப்படும் என்று தெளிவுபடுத்தியது. அதில் 2025 க்கு முன்னர் ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டிருந்தால், முந்தைய வாடகை குறியீடு இன்னும் பொருந்தும் எனவும், மேலும் வாடகை அதிகரிப்பு அதன் அடிப்படையில் இருக்கும் எனவும் கூறியுள்ளது.
அதுவே, 2025 அல்லது அதற்குப் பிறகு வீட்டு வாடகை ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டால், புதிய வாடகை குறியீடு பொருந்தும், மேலும் புதுப்பிக்கப்பட்ட குறியீட்டின் அடிப்படையில் வாடகை அதிகரிப்பு கணக்கிடப்படும் எனவும் தெரிவித்துள்ளது. துபாயில் புதிய ஸ்மார்ட் ரென்டல் இன்டக்ஸ் ஜனவரி 2025 இல் தொடங்கப்பட்டது, இந்த குறியீடு கட்டிட வகைப்பாடு, கட்டிடத்தில் வாடகை மதிப்புகள், அருகிலுள்ள பகுதி வாடகை விலைகள் மற்றும் பல புதிய அம்சங்களை கணக்கில் எடுத்துக்கொள்கிறது.
அத்துடன், துபாய் எமிரேட் முழுவதும் வாடகை விலைகளை நிர்ணயிப்பதில் வெளிப்படைத்தன்மை மற்றும் நியாயத்தை உறுதிப்படுத்த செயற்கை தொழில்நுட்ப முறையான AI ஐ துபாய் நிலத்துறை பயன்படுத்துகிறது. இது எமிரேட்டில் வசிக்கும் குடியிருப்பாளர்களுக்கு நிலையான வாடகைகளை உறுதிப்படுத்தவும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும் பெரிதும் உதவுகிறது.
பணவீக்கத்தைக் குறைத்தல்:
துபாயின் பணவீக்கத்தில் முக்கிய காரணியாக இருந்த வாடகை விலைகளின் தாக்கத்தை குறைக்க புதிய குறியீடு வடிவமைக்கப்பட்டுள்ளது. இது சந்தைக்கு ஏற்ப வாடகைகளை வைத்திருக்க உதவுவதுடன் அவற்றை யதார்த்தமான நிலைக்கு பராமரிப்பதையும் உறுதி செய்கிறது.
மேலும் இந்த புதிய குறியீடு, வாடகை அதிகரிப்பை மிகவும் கணிக்கக்கூடியது மற்றும் நம்பகமான தரவை அடிப்படையாகக் கொண்டு, நில உரிமையாளர்கள் மற்றும் குத்தகைதாரர்கள் இருவருக்கும் பயனளிக்கும் வகையில், வாடகை சந்தையில் நியாயத்தை பராமரிக்க தவறாமல் புதுப்பிப்பதாக துபாய் நிலத் துறை கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel