ADVERTISEMENT

UAE Jobs: ரீடெயில் துறையில் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள்..!! புதிய விரிவாக்க திட்டத்தில் லுலு ரீடெயில் குரூப்..!!

Published: 17 Feb 2025, 7:26 PM |
Updated: 17 Feb 2025, 7:27 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் லுலு ரீடெயில் குரூப், நாடு முழுவதும் பல்வேறு ஹைப்பர் மார்க்கெட் மற்றும் சில்லறை விற்பனை நிறுவனங்களை இயக்கி வரும் நிலையில், தற்போது அமீரகத்தில் உள்ள முக்கிய நகரங்களின் புறநகரில் விரிவாக்க பணிகளை திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதன் மூலம் ஆயிரக்கணக்கில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என தகவல்கள் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மூத்த அதிகாரிகளின் கூற்றுப்படி, டவுன்டவுன் மற்றும் நெரிசலான பகுதிகளுக்கு வெளியே மக்கள் தொகை பெருகுவதால், வரவிருக்கும் இந்த விரிவாக்கம், அமீரகத்தில் சில்லறை விற்பனை துறையில் ஆயிரக்கணக்கான புதிய வேலைகளை உருவாக்கும் என்று கூறப்படுகிறது. இது குறித்து லுலு குழுமத்தின் நிறுவனர் யூசுஃப்பலி M.A அவர்கள் பேசிய போது, துபாய், அபுதாபி, ஷார்ஜா மற்றும் வடக்கு எமிரேட்ஸில் புதிதாக 15 திட்டங்கள் வருவதாகவும், அமீரகத்தில் உள்ள மத்திய நகரங்களுக்கு வெளியே உள்ள பகுதிகளில் மக்கள் தொகை வளர்ச்சி அதிகரித்து வருவதால், நிறுவனம் அந்த பகுதிகளில் கவனம் செலுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் கூறியதாவது “துபாய், அபுதாபி, ஷார்ஜா மற்றும் நாட்டின் பிற முக்கிய நகரங்களின் மக்கள் தொகை ஏராளமான வெளிநாட்டு தொழிலாளர்களின் வருகையால் அதிவேகமாக வளர்ந்துள்ளது. நகரங்கள் மற்றும் மத்திய மாவட்டங்களில் அதிக வாடகை காரணமாக, பல குடியிருப்பாளர்கள் மத்தியில் இந்த பகுதிகள் மிகவும் பிரபலமாகி வருகின்றன. மக்கள்தொகை அடர்த்தியைப் பொறுத்து, லுலு இந்த பகுதிகளில் ஹைப்பர் மார்க்கெட்டுகள் அல்லது சிறிய எக்ஸ்பிரஸ் கடைகளைத் திறக்கும்” என்று கூறியுள்ளார்.

ADVERTISEMENT

இதற்கிடையில், லுலு சில்லறை விற்பனையின் தலைமை நிர்வாக அதிகாரி சைஃபி ரூபவாலா (Saifee Rupawala), அமீரகத்தில் வளர்ந்து வரும் மக்கள்தொகையுடன், லுலுவின் விரிவாக்கத்திற்கு குறிப்பிடத்தக்க வாய்ப்புகள் உள்ளன என்று குறிப்பிட்டுள்ளார். தற்பொழுது, டெவலப்பர்களுடன் கலந்துரையாடுவதாகவும், விவாதத்தில் 30 திட்டங்களைக் கொண்டுள்ளது என்றும், இருப்பினும் அவை இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்பதையும் வெளிப்படுத்தியுள்ளார்.

அமீரகம் மட்டுமல்லாமல், லுலு சவுதி அரேபியாவில் விரிவடைவதில் கவனம் செலுத்துவதாகவும் தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார். லுலு தற்போது சவுதி அரேபியாவில் 16 நகரங்களில் இயங்கி வரும் நிலையில், விஷன் 2030 ஒழுங்கமைக்கப்பட்ட சில்லறை விற்பனையை ஊக்குவிப்பதாகவும், மேலும் 31 நகரங்களில் வளர்ச்சிக்கு இடம் உள்ளதாகவும், குழுமம் 2028 க்குள் 100 கடைகளை இலக்காகக் கொண்டு, மேலும் 37 கடைகளைத் திறக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

மேலும், UAE, சவுதி அரேபியா மற்றும் பிற வளைகுடா நாடுகளில் திறக்கப்படவுள்ள இந்த புதிய கடைகள் ஏராளமான வேலைகளை உருவாக்கும் என்றும் சைஃபி ரூபவாலா உறுதியளித்துள்ளார். லுலுவின் IPO prospects-ன் கூற்றுப்படி, ஒரு ஹைப்பர் மார்க்கெட் பொதுவாக 290 ஊழியர்களைப் பயன்படுத்துகிறது, ஒரு எக்ஸ்பிரஸ் கடை 55 மற்றும் ஒரு மினி மார்க்கெட் மூன்று பேரைப் பயன்படுத்துகிறது.

ஜூன் 30, 2024 நிலவரப்படி, லுலு சுமார் 55,000 முழுநேர ஊழியர்களைப் பயன்படுத்துகிறது. இந்த குழு குவைத்தில் உள்ள புதிய நகரங்களையும் ஆராய்ந்து வருகிறது என கூறப்பட்டுள்ளது. சமீபத்தில், லுலு துபாயின் அல் சத்வாவில் கடந்த ஆண்டு புதிதாக கடையைத் திறந்தது. இந்த புதிய ஹைப்பர் மார்க்கெட் GCC-ல் லுலுவின் 252 வது கடையாகும். அல் ஜடாஃப், JLT, நாத் அல் ஹம்மர், துபாய் எக்ஸ்போ சிட்டி, கோர்பகான், மற்றும் ஓத் அல் முத்தினா உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் கூடுதல் கடைகள் விரைவில் திறக்கப்பட உள்ளதாகவும் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel