ரமலான் மாதம் துவங்குவதை முன்னிட்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள சுமார் 644 முக்கிய விற்பனை நிலையங்கள் 10,000 பொருட்களில் 50% க்கும் மேற்பட்ட தள்ளுபடியை வழங்குவதாக அறிவித்துள்ளன. குறிப்பாக, ஒரு co-op மட்டும் 35 மில்லியன் திர்ஹம்ஸ் மதிப்புள்ள தள்ளுபடியை அறிவித்திருப்பதாக பொருளாதார அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் 600 க்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்ட லுலு ஹைப்பர் மார்க்கெட், ரமலான் மாதத்தில் சுமார் 5,500 தயாரிப்புகளில் 65% வரை தள்ளுபடி வழங்குவதாக அறிவித்துள்ளது. மற்றொரு கூட்டுறவு 5,000 க்கும் மேற்பட்ட பொருட்களில் 60% வரை தள்ளுபடியைக் கொண்டுள்ளது என்று அமைச்சகத்தில் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் வணிக கட்டுப்பாட்டு இயக்குனரான சுல்தான் டார்விஷ் தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக ஐக்கிய அரபு அமீரகச் சந்தைகளுக்கு உணவுப் பொருட்களின் வருகை அதிகரித்துள்ளதால் இந்த தள்ளுபடி விற்பனை வருகிறது என கூறப்பட்டுள்ளது. அதே போல், துபாயில் உள்ள அல் அவீர் பழங்கள் மற்றும் காய்கறிகள் சந்தையில் அபுதாபி வர்த்தகர்களால் தினசரி இறக்குமதி 15,000 டன்கள் மற்றும் 6,000 டன்களை எட்டியுள்ளது. இது ரமலான் போன்ற உச்ச மாதங்களில் போதுமான விநியோகத்தை உறுதிப்படுத்த உதவுகிறது என்று டார்விஷ் சுட்டிக்காட்டியுள்ளார்.
9 அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளதா?
ரமலான் காலத்தை முன்னிட்டு, சமையல் எண்ணெய்கள், முட்டை, பால், அரிசி மற்றும் சர்க்கரை உள்ளிட்ட ஒன்பது அடிப்படை தயாரிப்புகளின் விலையை அதிகரிப்பதைத் தடுக்க பொருளாதார அமைச்சகம் திடீர் ஆய்வுகளை மேற்கொள்கிறது. சூப்பர் மார்க்கெட்டுகள், ஒப்புதல் இல்லாமல் இந்த பொருட்களின் விலையை உயர்த்த அனுமதிக்கப்படவில்லை.
எனவே, இணக்கத்தை உறுதி செய்வதற்காக, அமைச்சகம் ரமலானின் போது 420 ஆய்வு வருகைகளைத் திட்டமிட்டுள்ளது, ஏற்கனவே இந்த ஆண்டு 768 ஆய்வுகளை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 2024 ஆம் ஆண்டில், அமைச்சின் ஆய்வாளர்கள் 80,000 க்கும் மேற்பட்ட திடீர் வருகைகளை மேற்கொண்டனர், இதன் விளைவாக ஏராளமான மீறல்கள் கண்டறியப்பட்டன.
மேலும் அடிப்படை தயாரிப்புகள் தொடர்பான எந்தவொரு விலை மாற்றங்களையும் கண்காணிக்க ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் 14 முக்கிய விற்பனை நிலையங்களுடன் அமைச்சகம் தனது அமைப்புகளை இணைத்துள்ளது. அதாவது, எந்தவொரு அடிப்படை உற்பத்தியின் விலையையும் அங்கீகரிக்கப்பட்ட வரம்பைத் தாண்டி மாற்றினால், அது தானாக அதிகாரிகளுக்கு தெரிவிக்கும் என்று கூறப்படுகின்றது.
இது அமைச்சகத்திற்கு மட்டுமல்லாமல், அனைத்து உள்ளூர் பொருளாதார அதிகாரிகளிலும் இணைக்கப்பட்டுள்ளதாகவும், எனவே, நேரடி ஆய்வு வருகைகளுக்கு கூடுதலாக, 14 முக்கிய விற்பனை நிலையங்களை ஆன்லைனில் கண்காணிப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும், சூப்பர் மார்க்கெட்டுகளில் வரம்பைத் தாண்டிய விலை உயர்வையும், அத்துடன் எந்தவொரு சிக்கல்களையும் கட்டணமில்லா எண் 8001222 அல்லது அதன் சமூக ஊடக சேனல்கள் மூலம் புகாரளிக்குமாறு அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது. கடந்த ஆண்டு, 93% நுகர்வோர் புகார்கள் சரியான நேரத்தில் தீர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel