துபாயில் வரும் மார்ச் 1ம் தேதி முதல், மெட்ரோ நிலைய டிக்கெட் விற்பனை இயந்திரத்தில் நோல் கார்டை ரீசார்ஜ் செய்வதற்கான குறைந்தபட்ச தொகை 5 திர்ஹம்ஸிலிருந்து 20 திர்ஹம்ஸாக அதிகரிக்கும் என்று துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
எனவே மெட்ரோ நிலையங்களில் ரீசார்ஜ் செய்யும் பயணிகள் இனி தங்கள் நோல் கார்டை ரீசார்ஜ் செய்ய குறைந்தபட்ச தொகையை கையில் வைத்திருப்பது அவசியமாகும். ஆயினும் ரீசார்ஜ் செய்யும் இடத்தைப் பொறுத்தும் இந்த கட்டணம் மாறுபடும். உதாரணமாக ஒரு மெட்ரோ நிலைய டிக்கெட் அலுவலகத்தில் டாப்-அப் செய்ய குறைந்தபட்ச தொகை 50 திர்ஹம்ஸ் ஆகும்.
சமீபத்தில், துபாய் முழுவதும் நோல் கார்டுகளைப் பயன்படுத்தி அங்கீகாரம் பெற்ற இ-ஸ்கூட்டர் சவாரிகளுக்கு பணம் செலுத்துவதற்கான விருப்பத்தையும் RTA அறிமுகப்படுத்தியது. இது குடியிருப்பாளர்களிடையே பணமில்லா பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாகும்.
மேலும் துபாய்வாசிகள் போக்குவரத்து சேவைகளுக்கு தங்களின் நோல் கார்டுகளைப் பயன்படுத்துவதற்கும் மேலாக, சில சூப்பர் மார்க்கெட்டுகளில் மளிகை சாமான்கள் மற்றும் சில உணவகங்களில் சாப்பிடுவதற்கான கட்டணம் ஆகியவற்றிற்கு பணத்தை செலுத்தவும் NOL கார்டைப் பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel