ADVERTISEMENT

துபாய்: ‘Park now, Pay later’, ‘Autopay’ என ஈஸியாக பார்க்கிங் பரிவர்த்தனைகளை முடிக்க புதிய App அறிமுகம்!!

Published: 28 Feb 2025, 9:42 AM |
Updated: 28 Feb 2025, 9:42 AM |
Posted By: Menaka

துபாயில் கட்டண பொது பார்க்கிங் இடங்களின் மிகப்பெரிய ஆபரேட்டரான பார்கின் (Parkin), பார்க்கிங் பரிவர்த்தனைகளை எளிமையாக முடிக்க வடிவமைக்கப்பட்ட புதிய Parkin மொபைல் அப்ளிகேஷனை அறிமுகப்படுத்தியுள்ளது. IOS மற்றும் Android சாதனங்களுக்கு கிடைக்கும் இந்த ஆப்ஸில் “Park now, Pay later” மற்றும் நிகழ்நேர பார்க்கிங் கண்டறிதல் (real time parking finder) உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன. இது பயனர்கள் பார்க்கிங் அபராதம், கட்டணம் சம்பந்தமான சிக்கல்கள் மற்றும் பணத்தைத் திரும்பப்பெறுதல் போன்ற பல சேவைகள் பெற அனுமதிக்கிறது.

ADVERTISEMENT

இது குறித்து பார்க்கின் தலைமை நிர்வாக அதிகாரி மொஹமத் அப்துல்லா அல் அலி பேசுகையில், “முழு பார்க்கிங் செயல்முறையையும் எளிதாக்குவதன் மூலமும், பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்துவதன் மூலமும், நாங்கள் நகர்ப்புற இயக்கத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், துபாயின் 2040 நகர்ப்புற மாஸ்டர் திட்டத்தை ஒரு நிலையான, இணைக்கப்பட்ட நகரத்திற்கான நேரடியாக ஆதரிக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார். புதிய ஆப்ஸில் உள்ள முக்கிய அம்சங்கள் குறித்து பார்க்கின் ஒரு அறிக்கையில் விவரித்துள்ளது. அவற்றைப் பின்வருமாறு பார்க்கலாம்.

அப்ளிகேஷனின் முக்கிய அம்சங்கள்:

  • பார்க்கிங் ஃபைண்டர் (parking finder)- பயனர்கள் கிடைக்கக்கூடிய பார்க்கிங் இடங்களை விரைவாகக் கண்டுபிடிக்க உதவுகிறது, அதே நேரத்தில் அதன் மேம்பட்ட தேடல் செயல்பாடு பயனர்களுக்கு ஸ்ட்ரீட் மற்றும் ஆஃப்-ஸ்ட்ரீட் பார்க்கிங் விருப்பங்களை எளிதாகக் கண்டுபிடிக்க உதவுகிறது
  • முன்கூட்டியே பார்க்கிங் திட்டமிடல்- பயனர்கள் பார்க்கிங்கை முன்கூட்டியே திட்டமிடலாம் மற்றும் அதை தங்கள் காலெண்டர்களில் சேர்த்துக் கொள்ளலாம்.
  • பேலேட்டர் விருப்பம் (paylater)- பார்க்கிங் செய்ததன் பின்னர் தாமதமாக கட்டணம் செலுத்தும் சேவையை இது வழங்குகிறது. அதே நேரத்தில் டைனமிக் ஆட்டோ-ரினியூவல் – குறுக்கீடுகள் இல்லாமல் தொடர்ச்சியான பார்க்கிங் சேவையை உறுதி செய்கிறது.

Dubai motorists can ‘park now, pay later’, dispute fines as Parkin launches new app

அப்ளிகேஷனை பயன்படுத்துவது எப்படி?

அப்ளிகேஷனை பதிவு செய்ய மூன்று வழிகள் உள்ளன. அக்கவுண்ட்டை உருவாக்குவதன் மூலம், UAEPASS அல்லது RTA அக்கவுண்ட்டை பயன்படுத்துவதன் மூலம் அல்லது பார்கின் பதிவு படிவத்தை நிரப்புதல் மூலம் இதில் பதிவு செய்யலாம். பதிவுசெய்ததும், பயனர்கள் பொது மற்றும் தனியார் பார்க்கிங் இரண்டிற்கும் கட்டணம் செலுத்தலாம், மேலும் பார்க்கிங் அனுமதிகளை தங்கள் மொபைல் வாலட்டில் ஒருங்கிணைக்கலாம்.

ADVERTISEMENT

Dubai motorists can ‘park now, pay later’, dispute fines as Parkin launches new app

ஆட்டோ பே

பார்க்கின் டிக்கெட்டுகள், கட்டண இயந்திரங்கள் போன்றவற்றின் பரிவர்த்தனைகளின் தேவையை நீக்குவதன் மூலம் தடையற்ற பார்க்கிங் அனுபவத்தை வழங்குகிறது. இதில் உள்ள ‘ஆட்டோபே’ அம்சம் தானாகவே ஒரு வாகனத்தின் நம்பர் பிளேட்டை பயனரின் பதிவு செய்யப்பட்ட கட்டண முறையுடன் இணைக்கிறது. இதன் மூலம் ஒரு வாகனம் நுழையும் போது அல்லது வெளியேறும்போது, ‘தானியங்கி நம்பர்-பிளேட் அங்கீகாரம் (ANPR)’ தொழில்நுட்பம் அதைக் கண்டறிந்து பார்க்கிங் கட்டணத்தை தானாகக் கழிக்கிறது.

ADVERTISEMENT

இந்த அம்சம் பார்கின் நிர்வகிக்கும் மல்டி மாடி கார் பார்க்கிங் வசதிகள், மால் ஆஃப் தி எமிரேட்ஸ் மற்றும் தேரா சிட்டி சென்டர் உள்ளிட்ட மஜீத் அல் புத்தைம் மால்கள் போன்ற இடங்களிலும் கிடைக்கிறது.

எதிர்காலத்தில் வரவிருக்கும் அம்சங்கள்

எதிர்கால புதுப்பிப்புகளில் EV சார்ஜிங் கட்டண ஒருங்கிணைப்பு மற்றும் கார் கழுவுதல், பயணத்தின்போது எரிபொருள் நிரப்புதல், எண்ணெய் மாற்றங்கள், டயர் சோதனைகள் பேட்டரி ஆய்வுகள் மற்றும் பிற அத்தியாவசிய வாகன பராமரிப்பு சேவைகளை வழங்க திட்டமிட்டுள்ளதாக பார்க்கின் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel