ADVERTISEMENT

துபாயின் கராமா, அல் பர்ஷா, தேராவை மெட்ரோவுடன் இணைக்கும் ரயில்பஸ்..!! அதிகாரி வெளியிட்ட தகவல்கள்…

Published: 16 Feb 2025, 7:18 PM |
Updated: 16 Feb 2025, 7:18 PM |
Posted By: Menaka

துபாயில் சமீபத்தில் நடந்த உலக அரசாங்கங்களின் உச்சி மாநாட்டில் (WGS) 2025 புதிய போக்குவரத்து தீர்வான ‘RailBus’ அறிமுகப்படுத்தப்பட்டது. இது துபாய் மெட்ரோ அல்லது டிராம் மூலம் தற்போது சேவை செய்யப்படாத துபாயில் மக்கள் தொகை அதிகம் உள்ள பகுதிகளை இணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார். சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் (RTA) மூத்த அதிகாரியான மாலெக் ரமலான் மிஷ்மிஷ் கருத்துப்படி (Malek Ramadan Mishmish), துபாயில் மெட்ரோ அணுகல் இல்லாத கராமா, அல் பர்ஷா மற்றும் தேரா போன்ற சுற்றுப்புறங்கள் ரயில்பஸ் நிலையங்களைக் கொண்டிருக்கும் என்பது தெரிய வந்துள்ளது.

ADVERTISEMENT

மேலும், இந்த பகுதிகளில் ரயில்பஸ் ஒரு தனி இரயில் நெட்வொர்க்கைக்க் கொண்டிருக்கும் என்றும், ஏராளமான இருக்கைகள் மற்றும் நிற்கும் பகுதிகளுடன் கூடிய விசாலமான வாகனங்கள் உள்ளூர் சுற்றுப்புறங்களில் இருந்து பயணிகளை மெட்ரோவிற்கு கொண்டு வரும் என்றும் அவர் விவரித்துள்ளார்.

Malek Ramadan Mishmish

ADVERTISEMENT

அதிகாரி வெளியிட்ட விபரங்களின் படி, ரெயில்பஸின் முக்கிய அம்சங்களில் ஒன்று அதன் அமைதியான செயல்பாடாகும், இது ஒலி மாசுபாட்டைக் குறைப்பதால், குடியிருப்பு பகுதிகளுக்கு ஏற்றதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ரயில் மற்றும் பஸ் அமைப்புகளின் நன்மைகளை ஒருங்கிணைத்து குறிப்பாக இது பல நன்மைகளுடன் செலவு குறைந்த தீர்வாக அமைகிறது.

இது குறித்து தெரிவிக்கயில் “நாங்கள் ரயில் அம்சங்களையும் ஒரு பஸ்ஸின் வசதியையும் இணைக்கிறோம். ரயில்பஸ் பயணிகள் தங்கள் இலக்கை அடைய உதவும், குறிப்பாக குறுகிய பாதைகள் உள்ள பகுதிகள் மற்றும் தற்போதுள்ள மெட்ரோ இன்னும் செல்ல முடியாத இடங்களுக்கு இது செலவு குறைந்த தீர்வாக அமையும்” என்று மிஷ்மிஷ் மேலும் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

Dubai: How RailBus will connect internal areas of Karama, Al Barsha, Deira to Metro

ரயில்பஸ்ஸின் வடிவமைப்பும் சிறப்பம்சமும்

ரயில்பஸ் சூரிய சக்தியில் இயங்கும் மற்றும்  ஓட்டுநர் இல்லாததாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் துபாய் மெட்ரோ அல்லது டிராமை விட இது அதிக செலவு குறைந்தது என்று மிஷ்மிஷ் குறிப்பிட்டுள்ளார்.

Dubai: How RailBus will connect internal areas of Karama, Al Barsha, Deira to Metro

உச்சிமாநாட்டில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள ரயில் பஸ்ஸின் மாதிரியானது, ஒரு எதிர்கால வடிவமைப்பைக் கொண்டுள்ளது. நேர்த்தியான மற்றும் நவீன வடிவமைப்பைக் கொண்டுள்ள இந்த வாகனம் நகர்ப்புற நிலப்பரப்புகளுக்கு உகந்ததாக உள்ளது மற்றும் அதன்  ஏரோடைனமிக் வடிவம் பயணிகளின் வசதியை உறுதி செய்யும் அதே நேரத்தில் ஆற்றல் நுகர்வைக் குறைக்க உதவுகிறது.

Dubai: How RailBus will connect internal areas of Karama, Al Barsha, Deira to Metro

Dubai: How RailBus will connect internal areas of Karama, Al Barsha, Deira to Metro

காப்ஸ்யூல் போன்ற வடிவத்தில் இருக்கும் ரயில் பஸ் 11.5 மீட்டர் நீளமும், 2.65 மீட்டர் அகலமும், 2.9 மீட்டர் உயரமும், சர்வதேச ரயில் தரங்களை பூர்த்தி செய்யும் உயர்ந்த தடங்களில் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இவை மணிக்கு 100 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டவை மற்றும் 40 (24 அமர்ந்து 16 நிற்கும்) பயணிகளை ஏற்றிச் செல்லக் கூடியது. வெறும் 8 டன் எடையுள்ள, இந்த எதிர்கால வாகனங்கள் துபாயின் வளர்ந்து வரும் போக்குவரத்து தேவைகளுக்கு திறமையாகவும், நிலையானதாகவும், பொருத்தமானதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளதாக ஆணையத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dubai: How RailBus will connect internal areas of Karama, Al Barsha, Deira to Metro

RTA அடுத்த இரண்டு முதல் மூன்று ஆண்டுகளில் இந்த திட்டத்திற்கான தொழில்நுட்ப மற்றும் சாத்தியக்கூறு ஆய்வுகளை முடிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel