பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் தொகுத்து வழங்கும் 2025 ICC சாம்பியன்ஸ் டிராஃபி துபாய் ஸ்போர்ட்ஸ் சிட்டியில் நடைபெற உள்ளதால், இரண்டு பிரதான சாலைகளில் போக்குவரத்து தாமதங்கள் ஏற்படலாம் என்று துபாயில் உள்ள சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) வியாழக்கிழமை அறிவித்துள்ளது. ஆகவே, ஓட்டுநர்கள் தங்கள் பயணங்களை முன்கூட்டியே திட்டமிடவும், மென்மையான பயணத்திற்கு சீக்கிரமாக புறப்படுமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இது தொடர்பாக RTA வெளியிட்ட அறிவிப்பில், ஷேக் முகமது பின் சையத் சாலை மற்றும் ஹெஸ்ஸா ஆகிய இரண்டு முக்கிய சாலைகளிலும் பிப்ரவரி 20 ஆம் தேதி காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை, இரவு 9 மணி முதல் இரவு 11 மணி வரை போக்குவரத்து தாமதங்களை எதிர்பார்க்கலாம் என்று அறிவித்துள்ளது.
பாகிஸ்தானில் இந்தியா விளையாட மறுத்ததால், டிசம்பர் 2024 இல், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) இந்திய கிரிக்கெட் அணி போட்டிகளுக்கான நடுநிலை இடமாக ஐக்கிய அரபு அமீரகத்தை உறுதிப்படுத்தியுள்ளது. அதன் படி, துபாய் இன்டர்நேஷனல் ஸ்டேடியம் பின்வரும் மூன்று ஆட்டங்களை நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது: பிப்ரவரி 20 அன்று இந்தியா Vs பங்களாதேஷ், பிப்ரவரி 23 அன்று இந்தியா Vs பாகிஸ்தான், மற்றும் மார்ச் 2 அன்று இந்தியா மற்றும் நியூசிலாந்து.
இந்த ஆட்டங்களில் இந்தியா தகுதி பெற்றால், துபாய் மார்ச் 4 ஆம் தேதி ICC சாம்பியன்ஸ் கோப்பையின் முதல் அரையிறுதி மற்றும் மார்ச் 9 அன்று இறுதிப் போட்டியையும் நடத்தும், இந்தியா இறுதிப் போட்டிக்கு வரவில்லை என்றால், லாகூர் இரண்டாவது அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டியை நடத்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கிரிக்கெட் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா Vs பாகிஸ்தான் போட்டிக்கு முன்னதாக, விமான டிக்கெட்டுகளின் விலை கிடுகிடுவென அதிகரித்துள்ளன. விமான முன்பதிவுகளில் அதிகரிப்பு இருக்கும் என்று பயண வல்லுநர்கள் கணித்துள்ளனர். அவர்கள் கூற்றுப்படி, விமான கட்டணம் 20 முதல் 50 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாகவும், மேலும் இது கடைசி நேரத்தில் டிக்கெட்டுகள் இன்னும் இரட்டிப்பாகலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel