ADVERTISEMENT

UAE: ரமலான் முழுவதும் உணவு தயாரிக்கவும் காட்சிப்படுத்தவும் உணவகங்கள் அனுமதி பெறுவது கட்டாயம்..!! ஷார்ஜா முனிசிபாலிட்டி அறிவிப்பு..!!

Published: 20 Feb 2025, 10:49 AM |
Updated: 20 Feb 2025, 10:49 AM |
Posted By: Menaka

சமீபத்திய வானியல் கணக்கீடுகளின் அடிப்படையில், இஸ்லாமியர்களின் ரமலான் மாதம் மார்ச் 1 சனிக்கிழமையன்று தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், ஷார்ஜா உணவகங்கள் இந்த ரமலான் முழுவதும் உணவு தயாரிக்க இப்போது அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. உணவகங்களுக்கு இரண்டு வகையான அனுமதிகள் உள்ளன, ஒவ்வொரு அனுமதிக்கும் கட்டணம் மாறுபடும்.

ADVERTISEMENT

இது தொடர்பாக திங்களன்று ஷார்ஜா சிட்டி முனிசிபாலிட்டி வெளியிட்ட அறிவிப்பில், ரமலான் மாதத்தில் உணவு தயாரித்தல் மற்றும் விற்பனைக்கு இரண்டு வகையான பெர்மிட்களை வழங்கத் தொடங்கியதாகவும்,  கூடுதலாக, இஃப்தாருக்கு முன் உணவகங்களுக்கு வெளியே உணவைக் காண்பிப்பதற்கான அனுமதிகள் வழங்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

அதுமட்டுமில்லாமல், இஸ்லாமியப் பெருமக்கள் நோன்பு கடைபிடிக்கும் நேரங்களி்லும், உணவகங்கள் உணவைத் தயாரிக்கவும் விற்கவும் அனுமதிக்கப்படும் என்று ஷார்ஜா முனிசிபாலிட்டி கூறியுள்ளது. இருப்பினும், இந்த நடவடிக்கைகள் பின்வரும் தேவைகளுக்கு இணங்க வேண்டும்:

ADVERTISEMENT

தேவையான அனுமதிகளை வழங்குதல்

  • ஷாப்பிங் மால்களில் உள்ளவை உட்பட அனைத்து உணவு தயாரிப்பு மற்றும் விற்பனை தளத்திற்கு அனுமதி வழங்கப்படுகிறது.
  • உணவானது வாடிக்கையாளர்களுக்கு சாப்பாட்டு பகுதியில் வழங்கப்பட அனுமதி இல்லை.
  • உணவு தயாரித்தல் மற்றும் சமையல் சமையலறைகளுக்குள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.
  • அனுமதி கட்டணம்: 3,000 திர்ஹம்ஸ்

இஃப்தாருக்கு முன் கடைகளுக்கு வெளியே உணவைக் காட்சிப்படுத்த அனுமதி

  • உணவகங்கள், சிற்றுண்டிச்சாலைகள், இனிப்பு கடைகள் மற்றும் பேக்கரிகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
  • முன் பகுதியில் உணவு காட்டப்பட வேண்டும்.
  • உணவானது துருப்பிடிக்காத உலோகக் கொள்கலன்களில் வைக்கப்பட வேண்டும் மற்றும் ஒரு கண்ணாடி பெட்டியில் (100cm க்கும் குறையாமல்) மூடிய கதவுடன் காட்டப்பட வேண்டும்.
  • உணவு தர பேக்கேஜிங் பொருட்களைப் பயன்படுத்தி, அலுமினியம் ஃபாய்ல் அல்லது உணவு தர பிளாஸ்டிக்கால் உணவு மூடப்பட வேண்டும்.
  • உணவு பொருத்தமான வெப்பநிலையில் சேமிக்கப்பட வேண்டும்.
  • காட்சிப்படுத்தப்பட்ட உணவு அதன் அனுமதிக்கப்பட்ட செயல்பாட்டின் படி நிறுவனத்தில் தயாரிக்கப்பட வேண்டும்.
  • வழங்கல் கட்டணம்: 500 திர்ஹம்ஸ்.

A man displays iftar sweet outside his shop in the Mujarrah area on the first day of Ramadan in Sharjah. Photo: KT file

ஷார்ஜா சிட்டி முனிசிபாலிட்டியின் படி, எமிரேட்டில் உள்ள நிறுவனங்கள் பின்வரும் பல்வேறு சேவை சேனல்கள் மூலம் இந்த அனுமதிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என கூறியுள்ளது. அவை:

ADVERTISEMENT
  • முனிசிபல் டிராயிங் சென்டர் (அல் நசிரியா)
  • தசரீ சென்டர்
  • அல் ராகம் வஹெத் சென்டர்
  • முனிசிபாலிட்டி 24 சென்டர்
  • அல் சாகர் சென்டர்
  • அல் ரோலா சென்டர்
  • அல் கலிதியா சென்டர்
  • அல் சூரா வா அல் திகா சென்டர்
  • சைஃப் சென்டர்
  • அல் மலோமட் சென்டர்
  • அல் சாதா சென்டர்
  • தவ்ஜீ சென்டர்

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel