ADVERTISEMENT

UAE: ரமலான் மாதத்தில் நள்ளிரவுக்குப் பிறகு உணவகங்கள் செயல்பட அனுமதிக்கு விண்ணப்பிக்கலாம்..!! அறிவிப்பை வெளியிட்ட ஷார்ஜா..!!

Published: 24 Feb 2025, 5:26 PM |
Updated: 24 Feb 2025, 5:26 PM |
Posted By: Menaka

ஷார்ஜாவில் புனித மாதத்தின் போது, நள்ளிரவுக்குப் பிறகு செயல்பட விரும்பும் வணிகங்களுக்கான விண்ணப்பங்களை திறந்துள்ளதாக ஷார்ஜா முனிசிபாலிட்டி கடந்த வியாழக்கிழமை அறிவித்துள்ளது. சமீபத்திய வானியல் கணக்கீடுகளின் அடிப்படையில், ரமலான் மாதம் மார்ச் 1 சனிக்கிழமையன்று தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ADVERTISEMENT

எனவே, நிறுவனங்கள் ஷார்ஜா முனிசிபாலிட்டியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ‘Control and Inspection’ சேவையின் மூலம் ரமலானின் போது இரவு நேர வணிக நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்குவதற்கு விண்ணப்பிக்கலாம். இருப்பினும், கட்டுமான ஒப்பந்த நிறுவனங்கள் இந்த அனுமதிக்கு தகுதியற்றவை என்று கூறப்பட்டுள்ளது.

கூடுதலாக, ரமலான் முழுவதும் பகலில் உணவு தயாரிக்க அனுமதிகளுக்கு உணவகங்கள் விண்ணப்பிக்க முடியும் என்று ஆணையம் ஏற்கனவே அறிவித்துள்ளது. உணவகங்களுக்கு இரண்டு வகையான அனுமதிகள் உள்ளன, ஒவ்வொன்றும் வெவ்வேறு கட்டணங்களைக் கொண்டுள்ளன.

ADVERTISEMENT

இது தவிர, ரமலான் மாதம் முழுவதும் நோன்பு திறக்கும் நேரமான இஃப்தாருக்கு முன் நிறுவனங்கள் தங்கள் உணவகங்களுக்கு  வெளியே உணவுப் பண்டங்களை காட்சிப்படுத்துவதற்கும் ஷார்ஜாவில் முன் அனுமதி பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

ADVERTISEMENT