துபாயின் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள், புகழ்பெற்ற புர்ஜ் கலீஃபா கட்டிடத்திலிருந்து துணிச்சலாகக் குதிக்கும் ஒரு சாகச வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, தனது மில்லியன் ஃபாலோவர்ஸை ஆச்சரியப்படுத்தியுள்ளார். “Exit 139 Burj Khalifa Base Jump” என்று பெயரிடப்பட்ட இந்த வீடியோ, பார்வையாளர்களுக்கு உலகின் மிக உயரமான கட்டிடங்களில் ஒன்றிலிருந்து பேஸ் ஜம்ப் (base jump) செய்வது எப்படி இருக்கும் என்பதைப் பற்றிய தனித்துவமான காட்சியை வழங்குகிறது.
வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட இந்த வீடியோ, 15 வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த 31 விளையாட்டு வீரர்களின் நம்பமுடியாத முயற்சிகளைக் காட்டுகிறது. மேலும், அந்த பதிவுக்கு, “Exit 139 437 Jumps 31 Athletes 15 Nationalities #XDubai” என்ற தலைப்பும் கொடுக்கப்பட்டிருந்தது. வெறும் 60 நிமிடங்களில், இந்த வீடியோ கிட்டத்தட்ட 1 மில்லியன் பார்வைகளைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
‘XDubai’ ஆல் ஏற்பாடு செய்யப்பட்ட “EXIT139” என்ற இந்த நிகழ்வு, துபாய் பொருளாதாரம் மற்றும் சுற்றுலாத் துறை (DET), ஸ்கைடைவ் துபாய் மற்றும் Emaar ஆகியவற்றுடன் இணைந்து, சிறந்த விளையாட்டு வீரர்களைக் கொண்ட ஒரு சிலிர்ப்பூட்டும் BASE ஜம்ப் போட்டியாகும். உலகின் சிறந்த பேஸ் ஜம்பர்களில் 31 பேர் இந்த நிகழ்வில் பங்கேற்றதாகக் கூறப்படுகிறது. இந்த ஆண்டு நிகழ்வு, 2014 இல் புர்ஜ் கலீஃபாவிலிருந்து ‘முதல் BASE ஜம்ப்’ செய்ததன் பாரம்பரியத்தைத் தொடர்ந்து கட்டமைக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் பங்கேற்பாளர்கள் புர்ஜ் கலீஃபாவின் 139வது மாடி பால்கனிக்கு அப்பால் 6 மீட்டர் நீட்டிக்கப்பட்டு, சிறப்பாக வடிவமைக்கப்பட்ட 12-மீட்டர் மேடையில் இருந்து குதித்தனர். இரண்டு நாள் காட்சியின் போது மொத்தம் 437 முறை ஜம்ப்பிங் மேற்கொள்ளப்பட்டது என்றும், ஒவ்வொன்றுக்கும் துல்லியமான திட்டமிடல் மற்றும் மன கவனம் தேவை என்றும் வீரர்கள் கூறுகின்றனர்.
View this post on Instagram
மேலும் இந்த நிகழ்வில் தேவையான அனைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த நிகழ்வு துபாயின் புதுமை, லட்சியம் மற்றும் வரம்பற்ற சாத்தியக்கூறுகள் ஆகியவற்றின் உணர்வை எடுத்துக்காட்டும், அதே நேரத்தில் விளையாட்டு வீரர்களின் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்துவதாக இருக்கின்றது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel