ADVERTISEMENT

துபாய் ஏர்போர்ட் செல்பவர்கள் கவனத்திற்கு: பல பஸ் ரூட்கள் தற்காலிகமாக மாற்றம்!! RTA அறிவிப்பு..!!

Published: 22 Feb 2025, 7:28 PM |
Updated: 22 Feb 2025, 7:30 PM |
Posted By: Menaka

துபாய் சர்வதேச விமான நிலையத்தை (DXB) சுற்றி மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருவதால், பல பொது பேருந்து வழித்தடங்கள் தற்காலிக மாற்றப்பட்டு, வேறு வழித்தடங்களில் திசை திருப்பப்பட்டிருப்பதாக சனிக்கிழமை சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) அறிவித்தது. பிப்ரவரி 21 முதல் அமலில் உள்ள இந்த மாற்றங்கள், மீண்டும் மறு அறிவிப்பு வரும் வரை தொடரும் என்பதையும் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது.

ADVERTISEMENT

ஆகவே, தாமதங்களைத் தவிர்க்க, பயணிகள் முன்னரே திட்டமிடவும் கூடுதல் பயண நேரத்தை அனுமதிக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், மேம்பாட்டுப் பணிகளின் ஒரு பகுதியாக, பேருந்துகள் இனி விமான நிலைய டெர்மினல் 1 அரைவல் பகுதிக்குள் நுழையாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பாதைகள்:

  • ரூட் 24: விமான நிலைய டெர்மினல் 1 அரைவல் பஸ் நிறுத்தத்தில் இருந்து அல் நஹ்தா நிலையத்தை நோக்கிய சேவை ரத்து செய்யப்படுகிறது. மாற்றாக ஒரு தற்காலிக பஸ் நிறுத்தம் (எண் 544501) சேர்க்கப்பட்டுள்ளது.
  • ரூட் 32 C: விமான நிலைய டெர்மினல் 1 அரைவல் பஸ் நிறுத்தத்தில் இருந்து அல் சத்வா நிலையத்தை நோக்கிய சேவை ரத்து செய்யப்படுகிறது.
  • ரூட் C01: விமான நிலைய டெர்மினல் 1 அரைவல் பஸ் நிறுத்தத்தில் இருந்து அல் சத்வா நிலையத்தை நோக்கிய சேவை ரத்து செய்யப்படுகிறது.
  • ரூட் 33: விமான நிலைய டெர்மினல் 1 அரைவல் பஸ் நிறுத்தத்தில் இருந்து அல் கராமா நிலையத்தை நோக்கிய சேவை ரத்து செய்யப்படுகிறது. எமிரேட்ஸ் மெட்ரோ ஸ்டேஷன் பஸ் ஸ்டாப் 1 (235001) இல் தற்காலிக நிறுத்தம் சேர்க்கப்பட்டுள்ளது.
  • ரூட் 77: விமான நிலைய டெர்மினல் 3 பஸ் நிறுத்தங்கள் இரு திசைகளிலும் ரத்து செய்யப்படுகின்றன.
  • ரூட் N30: விமான நிலைய டெர்மினல் 1 அரைவல் பஸ் நிறுத்தத்தில் இருந்து இரு திசைகளிலும் சேவை ரத்து செய்யப்படுகிறது. பயணிகள் விமான நிலைய டெர்மினல் 1 வெளிப்புற பார்க்கிங் பகுதியை இன்டர்நேஷனல் சிட்டி பஸ் நிலையத்தை நோக்கிய மாற்று நிறுத்தமாக பயன்படுத்தலாம்.

எனவே, டெர்மினல் 1 அரைவல் பகுதிக்கு செல்லும் பயணிகள் பாதிக்கப்பட்ட பஸ் வழித்தடங்களை சரிபார்க்க வேண்டும் மற்றும் துபாய் மெட்ரோ அல்லது எமிரேட்ஸ் மெட்ரோ ஸ்டேஷன் பஸ் ஸ்டாப் 1 ஐ விரைவான பயணத்திற்கு பயன்படுத்தலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel