ADVERTISEMENT

துபாயின் புதிய சாலிக் கட்டண முறையால் ஒரு சில பகுதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்.. குடியிருப்பாளர்கள் தெரிவிப்பது என்ன..??

Published: 18 Feb 2025, 6:27 PM |
Updated: 18 Feb 2025, 6:28 PM |
Posted By: Menaka

துபாயின் டோல் ஆப்பரேட்டரான சாலிக் நிறுவனம் ஜனவரி 31 முதல் புதிய மாறுபட்ட சாலை டோல்கேட் கட்டண முறையையும், நவம்பர் 2024 இல், இரண்டு புதிய டோல் கேட்களையும் அறிமுகப்படுத்திய நிலையில், இவற்றின் தாக்கம் ஒரு சில மாற்றங்களை துபாயில் ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் சாலிக்கின் புதிய டைனமிக் டோல் விலை நிர்ணயம் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, குடியிருப்பாளர்கள் ஏற்கனவே போக்குவரத்தில் ஏற்படும் மாற்றங்களைக் கவனித்து வருகின்றனர்.

ADVERTISEMENT

சாலிக், வார நாட்களில், போக்குவரத்து அதிகமுள்ள காலை 6 முதல் 10 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் 6 திர்ஹம்ஸ் மற்றும் வாகன நெரிசல் அதிகம் இல்லாத நேரங்களில், அதாவது காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரையிலும், இரவு 8 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரையிலும் 4 திர்ஹம்ஸ் கட்டணம் வசூலிக்கிறது. அதேபோல், பொது விடுமுறைகள், சிறப்பு நிகழ்வுகள் அல்லது முக்கிய நிகழ்வுகள் தவிர்த்து மற்ற ஞாயிற்றுக்கிழமைகளில் நாள் முழுவதும் கட்டணம் 4 திர்ஹம்ஸ் ஆகவும், அதிகாலை 1 மணி முதல் காலை 6 மணி வரை இலவசமாகவும் இருக்கிறது.

இந்த மாற்றத்தால் பல குடியிருப்பாளர்கள் பயனடவைதாக தெரிவித்துள்ளனர். குறிப்பாக, துபாய் மீடியா சிட்டியில் பணிபுரியும் குடியிருப்பாளர் ஒருவர், காலை 6 மணிக்கு முன்னர் டோல் வாயில்களைக் கடந்து கட்டணத்தைத் தவிர்ப்பதன் மூலம், புதிய அமைப்பிலிருந்து பயனடைவதாக தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

கராமாவில் வசிக்கும் மற்றொரு குடியிருப்பாளர், சஃபா மற்றும் பார்ஷா டோல் கேட் வழியாகச் சென்ற போது, போக்குவரத்து மென்மையாக இருந்தது மற்றும் துபாய் மெரினாவுக்குச் செல்லும்போது நேரத்தை மிச்சப்படுத்த உதவியது, இருப்பினும் சாலிக் கட்டண செலவுகள் அதிகரித்துள்ளன என்று அவரது அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.

இதற்கிடையில், புதிய சாலிக் கட்டண முறைகளின் காரணமாக பெரும்பாலான ஓட்டுநர்கள் சாலிக் கேட்களை தவிர்க்க முயற்சிப்பதால், சில பகுதிகள்  போக்குவரத்தில் அதிகரிப்பை அனுபவித்துள்ளன. அதாவது, பல ஓட்டுநர்கள் டோல் கேட்களைத் தவிர்க்க மக்கள் வசிக்கும் சமூக பகுதிகள் வழியாக குறுக்குவழிகளை எடுத்து வருவதாகவும், இதனால் சாலைகளை நெரிசலாக்குவதாகவும் குடியிருப்பாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

ADVERTISEMENT

பொது போக்குவரத்தை ஊக்குவித்தல்

துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) கடந்த ஆண்டு, நகரில் மேலும் இரண்டு சுங்கச்சாவடிகளைச் சேர்த்து, மொத்த கேட்களின் எண்ணிக்கையை 10 ஆகக் கொண்டுவந்தது. பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதும், ஷேக் முகமது பின் சையத் சாலை, துபாய்-அல் அய்ன் சாலை, ராஸ் அல் கோர் ஸ்ட்ரீட், அல் மனாமா ஸ்ட்ரீட் போன்ற மாற்றுப் பாதைகளுக்கு போக்குவரத்தை மறுபகிர்வு செய்வதும் இதன் இலக்கு என்று ஆணையம் குறிப்பிட்டது.

பொது போக்குவரத்து விருப்பங்களை வழங்குவதில் துபாய் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும், தனியார் கார்கள் மீதான நம்பகத்தன்மையைக் குறைக்க இன்னும் பலவற்றைச் செய்ய வேண்டும் என்றும் கலீஃபா பல்கலைக்கழகத்தின் நிலையான நகர்ப்புறத்தின் இணை பேராசிரியர் டாக்டர் கலீத் அலவாடி தெரிவித்துள்ளார்.

ஏழு GCC நகரங்களில் நடத்தப்பட்ட போக்குவரத்து அமைப்புகளின் ஆய்வில், துபாய் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. 78% குடியிருப்பாளர்கள் பொது போக்குவரத்தில் பயணம் செய்கிறார்கள். துபாயின் வளர்ந்து வரும் மக்கள்தொகையின் தேவைகளைப் பூர்த்தி செய்ய கூடுதல் போக்குவரத்து வசதிகளும் மேற்கொள்ளப்படும் என்றும் கூறப்படுகின்றது.

இவ்வாறு பொது போக்குவரத்தை மேம்படுத்த பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த போதிலும் வாகனங்களை பயன்படுத்தும் குடியிருப்பாளர்களுக்கு தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள கட்டண முறைகள் ஒரு தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது என்பதில் சந்தேகமில்லை.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel