ADVERTISEMENT

அமீரகத்தில் விற்கப்படும் உணவின் பிறப்பிடத்தை அறிய புதிய டிஜிட்டல் தளம் வெளியீடு!!

Published: 24 Feb 2025, 11:15 AM |
Updated: 24 Feb 2025, 11:19 AM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தில் நுகர்வோரான பொதுமக்கள் தங்கள் உணவு எங்கிருந்து வருகிறது என்பதைக் கண்டறியவும், அது நெறிமுறையாக இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்தவும் ‘Montaji+’ என்ற புதிய டிஜிட்டல் தளம் உருவாக்கப்பட்டு வருவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்து துபாய் முனிசிபாலிட்டியின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த தளம் தயாரிப்பின் உற்பத்தியாளரின் இருப்பிடம் மற்றும் அதன் கார்பன் தடம் போன்ற விவரங்களை வழங்கும். தற்பொழுது, இது சோதனை கட்டத்தில் இருந்தாலும், பதிவுசெய்தல் செயல்முறையை விரைவாகவும் எளிதாகவும் மாற்ற AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

அதாவது, முன்னதாக, நிறுவனங்கள் புதிய தயாரிப்புகளை பதிவு செய்ய படிவங்களை கைமுறையாக நிரப்ப வேண்டியிருந்தது, ஆனால் மொன்டாஜி தளத்தில், உற்பத்தியின் படத்தை மட்டுமே பதிவேற்றினால் மட்டுமே போதும், மேலும் AI தானாகவே தேவையான தகவல்களை குறுகிய காலத்தில் எளிதாக முடித்துக் கொடுக்கும் என்றும் கூறப்படுகிறது.

Gulfood 2025 இன் 30 வது பதிப்பில் Montaji+ தளம் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், உணவு பாதுகாப்புத் துறையின் இயக்குனர் சுல்தான் அல் தாஹர், DM ஸ்மார்ட் ஆய்வு அமைப்பு மற்றும் அனுமதி அமைப்பு போன்ற தற்போதைய அமைப்புகளை மோன்டாஜி ஒன்றாக ஒருங்கிணைக்கும் என்றும், இந்த ஒருங்கிணைப்பு AI ஐப் பயன்படுத்தி செயல்முறைகளை நெறிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

UAE: Want to know where your food came from? New platform to list safety information

“இங்கே நிறுவனங்களுக்கு வழிகாட்டுதல், தேவையான தரங்களை வழங்குதல் மற்றும் அவர்களின் தயாரிப்புகளை பதிவு செய்வதற்கு உதவுவதே எங்களின் பங்கு” என்று அல் தாஹர் மேலும் கூறியுள்ளார்.

ADVERTISEMENT

அவரது கூற்றுப்படி, உணவக உரிமையாளர்களும் இந்த அமைப்பிலிருந்து பயனடைவார்கள். முன்னதாக, ஒரு உணவகத்திற்கு பதிவு செய்வதற்கு முன்னும் பின்னுமாக அனுப்பப்பட்ட ஏராளமான மின்னஞ்சல்கள் தேவைப்பட்டன, அவை நேரத்தை எடுத்துக்கொள்ளும். எனவே,  பழைய முறைக்கு பதிலாக, அவர்கள் இப்போது தங்கள் உணவக விவரங்கள் மற்றும் திட்டங்களை (புளூபிரிண்ட்) தளத்தின் மூலம் எளிதாக சமர்ப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

கூடுதலாக, ‘கிரீன் சேனல்’ என்று அழைக்கப்படும் மற்றொரு அம்சம், நல்ல தட பதிவுகளைக் கொண்ட நிறுவனங்களை ஆய்வுகளைத் தவிர்ப்பதற்கு அனுமதிக்கும். ஒரு நிறுவனம் தனது தயாரிப்புகளை நல்ல நிலையில் வைத்திருந்தால், சமீபத்திய ஆண்டுகளில் எந்த புகாரும் இல்லையென்றால், அதன் தயாரிப்புகளை ஆய்வு தேவையில்லாமல் நேரடியாக சந்தைக்கு அனுப்ப முடியும் என்று அல் தாஹர் தெளிவுபடுத்தியுள்ளார்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel