ADVERTISEMENT

அமீரகத்தின் சூப்பர் மார்க்கெட்டுகள், பெட்ரோல் நிலையங்களில் லாட்டரி டிக்கெட்டுகள் விற்கப்படும் என UAE lottery தகவல்..!!

Published: 6 Feb 2025, 7:06 PM |
Updated: 6 Feb 2025, 7:07 PM |
Posted By: Menaka

அமீரகத்தில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டு நடத்தப்பட்டு வரும் UAE லாட்டரி (UAE lottery) அதன் டிக்கெட்டுகளை சூப்பர் மார்க்கெட்டுகள், எரிபொருள் நிலையங்கள் மற்றும் கன்வீனியன்ஸ் ஸ்டோர் போன்ற சில்லறை விற்பனை இடங்களில் விற்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக தி கேம் நிறுவனத்தின் லாட்டரி நடவடிக்கைகளின் இயக்குனர் பிஷப் வூஸ்லி அவர்கள் செய்தி ஊடகங்களிடம் பேசிய போது, இந்த நடவடிக்கை எப்போது துவங்கும் என குறிப்பிடவில்லை, ஆனால் நிறுவனம் அதை விரைவில் செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

2024இன் பிற்பகுதியில் தொடங்கப்பட்ட UAE லாட்டரியின் டிக்கெட்டுகளை தற்போது அதன் வலைத்தளத்தின் மூலம் மட்டுமே வாங்க முடியும், ஆனால் நிறுவனம் விரைவில் லாட்டரியின் டிஜிட்டல் தளத்திற்கு எளிதான அணுகலை வழங்கும் ஒரு அப்ளிகேஷனை உருவாக்கும் என்று பிஷப் கூறியுள்ளார்.

மேலும், டிக்கெட்டுகள் எவ்வாறு ஆஃப்லைனில் விற்கப்படும் என்று அவரிடம் கேட்கப்பட்டபோது, ​​மக்கள் ஒரு கடைக்குச் சென்று அவற்றை வாங்க முடியும் என்று பதிலளித்துள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது: “நாங்கள் ஒரு சாதாரண லாட்டரியை போல் மக்கள் எளிதில் வாங்கும் சூழலை வைக்க முயற்சிக்கிறோம்” என்று  கூறினார்.

ADVERTISEMENT

மேலும், லக்கி டே டிக்கெட்டை வாங்கக்கூடிய ஒரு டெர்மினல் அல்லது, டிக்கெட் விற்பனை இயந்திரம் போன்ற பிற விற்பனை முறைகளும் இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, UAE லாட்டரி கிடைப்பது குறித்து வாடிக்கையாளர்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக, டிக்கெட்டுகளை விற்கும் கடைகளில் சந்தைப்படுத்தல் பொருட்கள் இடம்பெறும் என்பதையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஐக்கிய அரபு அமீரகத்தின் முதல் ஒழுங்குபடுத்தப்பட்ட லாட்டரி நடவடிக்கையான UAE லாட்டரியில் ஒவ்வொரு பதினைந்து நாட்களுக்கும் சனிக்கிழமைகளில் டிராக்கள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில் மேலும், அதிகமான கேம்கள் விரைவில் சேர்க்கப்படும் என்று பிஷப் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

அவரது கூற்றுப்படி, UAE லாட்டரியைப் பொறுத்த வரை, அவர்கள் என்ன விளையாடுகிறார்கள், எவ்வளவு விளையாடுகிறார்கள், என்ன கேம்களை விரும்புகிறார்கள் போன்ற பங்கேற்பாளர்களின் விருப்பத்தேர்வுகள்  முக்கியமானவை என்பதால், மக்கள் விரும்புவதை உருவாக்க தொடர்ந்து கேம்கள் மாற்றப்படும் என்பது தெரிய வந்துள்ளது.

உரிம செயல்முறை

UAE லாட்டரியின் ஒவ்வொரு விளையாட்டும் நாட்டின் பொது வணிக கேமிங் ஒழுங்குமுறை ஆணையத்தால் (GCGRA) கடுமையான உரிமத் தேவைகளை பூர்த்தி செய்துள்ளதாக பிஷப் வெளிப்படுத்தினார். அபுதாபியை தலைமையிடமாகக் கொண்ட GCGRA என்பது ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அனைத்து வணிக கேமிங் நடவடிக்கைகள் மற்றும் வசதிகளை ஒழுங்குபடுத்துவதற்கும், உரிமம் மற்றும் மேற்பார்வையிடுவதற்கும் பிரத்யேக அதிகார வரம்பைக் கொண்ட நிர்வாக அதிகாரமாகும்.

மேலும், “எங்கள் தளம், நடைமுறைகள், செயல்முறைகள் மற்றும் எங்கள் விளையாட்டுகள் சர்வதேச ஆய்வகங்களால் சோதிக்கப்படுகின்றன, விலை கட்டமைப்பு என்பது நாங்கள் சொல்வதையும், எங்கள் தளம் பாதுகாப்பானது என்பதையும் உறுதி செய்கிறது” என்பதை எடுத்துரைத்துள்ளார்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel