ADVERTISEMENT

ஒரு மணி நேரத்திற்கு 25 திர்ஹம்ஸ்.. துபாயில் அமலுக்கு வரும் நிகழ்வுப் பகுதிகளுக்கான புதிய திருத்தப்பட்ட பார்க்கிங் கட்டணம்…

Published: 12 Feb 2025, 7:35 PM |
Updated: 12 Feb 2025, 7:35 PM |
Posted By: Menaka

துபாயின் சில பகுதிகளில் பிப்ரவரி 17 முதல் புதிய மாறக்கூடிய பார்க்கிங் கட்டணங்கள் (variable parking fees) அறிமுகப்படுத்தப்படும் என்று எமிரேட்டின் பொது பார்க்கிங் ஆப்பரேட்டரான பார்கின் (parkin) புதன்கிழமை அறிவித்துள்ளது. நிறுவனம் ஏற்கனவே வெளியிட்ட அறிவிப்பின் படி, சிறப்பு நிகழ்வுகளின் போது நிகழ்வு நடைபெறும் இடங்களுக்கு (event area) அருகில் உள்ள சில பகுதிகளில் பார்க்கிங் செய்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு 25 திர்ஹம்ஸ் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் என கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும், பார்க்கின் X தளத்தில் வெளியிட்ட பதிவில், சிறப்பு நிகழ்வுகள் நடைபெறும் இடத்திற்கான பார்க்கிங் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளதன் காரணமாக நீங்கள் ஒரு நிகழ்வு மண்டலத்திற்குச் செல்ல வேண்டி இருந்தால், பொதுப் போக்குவரத்தை பயன்படுத்த பரிந்துரைப்பதாகவும் கூறியுள்ளது. அத்துடன் இது துபாய் உலக வர்த்தக மையத்தைச் சுற்றியுள்ள பகுதியை ‘Grand Event Zone’ என்றும் குறிக்கின்றது.

முன்னதாக, பார்க்கின் இந்த மாத தொடக்கத்தில், F ஸோன் பகுதிகளுக்கான பார்க்கிங் கட்டணங்களை உயர்த்தியுள்ளதாக அறிவித்திருந்தது. பிப்ரவரி 1 ஆம் தேதி செயல்படுத்தப்பட்ட இந்த புதிய கட்டணங்கள், அனைத்து F ஸோன் பார்க்கிங் இடங்களுக்கும் பொருந்தும். இந்த பகுதிகளில் அல் சுஃபூஹ் 2, தி நாலேஜ் வில்லேஜ், துபாய் மீடியா சிட்டி மற்றும் துபாய் இன்டர்நெட் சிட்டி போன்ற இடங்கள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

ADVERTISEMENT