ADVERTISEMENT

அபுதாபி பிக் டிக்கெட்டில் பரிசை வென்ற தமிழர்.. 9 ஆண்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி..!!

Published: 10 Mar 2025, 5:49 PM |
Updated: 10 Mar 2025, 6:04 PM |
Posted By: Menaka

அபுதாபியில் அறிவிக்கப்பட்ட சமீபத்திய பிக் டிக்கெட் ரேஃபிள் டிராவில் தமிழர் ஒருவர் வெற்றி பெற்றிருக்கிறார். இவருக்கு புத்தம் புதிய ரேஞ்ச் ரோவர் வேலார் (Range Rover Velar) கார் பரிசாக அளிக்கப்பட்டுள்ளது. சுமார் ஒன்பது ஆண்டுகளாக ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்து வரும் பாபுலிங்கம் பால் துரை என்பவரே அந்த அதிர்ஷ்டசாலி வெற்றியாளர் ஆவார்.

ADVERTISEMENT

39 வயதான தமிழ்நாட்டைச் சேர்ந்த சிவில் இன்ஜினியரான இவர், கிட்டத்தட்ட ஒரு தசாப்த காலமாக இந்த டிராவில் பங்கேற்று வந்த நிலையில், இப்போது ஆடம்பர காரை வென்றுள்ளார். வெற்றி பெற்றது குறித்து அவர் கூறுகையில் தனக்கு பரிசாக கிடைத்த காரை தனது பணத்தேவைகளை தீர்க்கவும், தனது குழந்தைகளின் கல்வியைப் பாதுகாக்கவும் விற்கத் திட்டமிட்டுள்ளதாக பாபுலிங்கம் தெரிவித்துள்ளார்.

 

ADVERTISEMENT

ஆரம்பத்தில் சக ஊழியர்களுடன் டிக்கெட்டுகளை வாங்கி வந்த பாபுலிங்கம், ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு அவற்றை சொந்தமாக வாங்கத் தொடங்கியிருக்கிறார். இந்நிலையில் வெற்றி பெற்றது குறித்து அவர் கூறுகையில், “நான் வெற்றி பெற்றதை அறிந்ததும், மகிழ்ச்சியில் மூழ்கினேன். இது எனக்கும் எனது குடும்பத்திற்கும் ஒரு நம்பமுடியாத தருணம்” என்று தனது உற்சாகத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.

மேலும், டிராவில் மற்றவர்கள் தங்கள் அதிர்ஷ்டத்தை தொடர்ந்து முயற்சிக்க ஊக்குவித்த பாபுலிங்கம், பிக் டிக்கெட் டிராவில் தொடர்ந்து பங்கேற்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். பிக் டிக்கெட் ப்ரோமோஷனின் படி, இந்த மாதம், ஒரு அதிர்ஷ்டசாலி வெற்றியாளர் 15 மில்லியன் திர்ஹம்ஸ் கிராண்ட் பரிசை வெல்வார். கூடுதலாக, ஏப்ரல் 3 ஆம் தேதி நடைபெறும் நேரடி டிராவில் 10 பேர் தலா 50,000 திர்ஹம்களை வெல்வார்கள்.

ADVERTISEMENT

அதுமட்டுமில்லாமல், மார்ச் 1 முதல் 25 வரை ஒரே பரிவர்த்தனையில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட டிக்கெட்டுகளை வாங்கினால், 20,000 திர்ஹம் முதல் 150,000 திர்ஹம் வரை ரொக்கப் பரிசுகளை வழங்கும் பிக் வின் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கும். வெற்றியாளர்கள் ஏப்ரல் 1 ஆம் தேதி அறிவிக்கப்படுவார்கள் என்று பிக் டிக்கெட் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதே மார்ச் மாதத்தில், ஒரு தனிநபர் ரேஞ்ச் ரோவர் வேலரையும் வெல்லக்கூடிய வாய்ப்புள்ளது. இதில் வெற்றி பெற்ற நபர் வரும் மே 3 ஆம் தேதி அறிவிக்கப்படுவார்.

இந்த பிக் டிக்கெட்டுகளை வாங்க விரும்புபவர்கள் பிக் டிக்கெட் இணையதளத்தில் அல்லது சையத் சர்வதேச விமான நிலையம் மற்றும் அல் அய்ன் விமான நிலையத்தில் உள்ள கவுண்டர்களில் வாங்கிக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel