ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில் உள்ள முகமது பின் சையத் சிட்டியில் 33 புதிய பூங்காக்கள் திறக்கப்பட்டுள்ளதாக நகராட்சிகள் மற்றும் போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. இந்த புதிய பொழுதுபோக்கு இடங்களில் சுற்றுலா பகுதிகள், நிழல் இருக்கை, குழந்தைகள் விளையாட்டுப் பகுதிகள், உடற்பயிற்சி மண்டலங்கள் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிப்பதற்காக ஜாகிங் பாதைகள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
கூடுதலாக, கூடைப்பந்து, கைப்பந்து மற்றும் பூப்பந்து ஆகியவற்றிற்கான விளையாட்டு மைதானங்களும் உள்ளன. இது குறித்து வெளியிட்ட அறிவிப்பின் படி, பூங்காக்கள் பலவிதமான வசதிகளை வழங்குவதன் மூலம் குடியிருப்பாளர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
அதுமட்டுமல்லாமல், பூங்காக்கள் மாற்றுத்திறனாளி மக்களின் அணுகலை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது, இது அவர்களுக்கான மேம்பட்ட வசதிகள் கிடைப்பதை உறுதிசெய்கிறது எனவும் கூறப்பட்டுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel